சர்க்கரை நோயாளிகள்

காலையில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம். தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மாத விடாய் 

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி பிரச்சினைகள் நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.

தலை முடி வளர்ச்சி

தலை முடி வளர்ச்சியில் வெந்தயத்தின் பங்கு முக்கியமானது. அதில் உள்ள எண்ணெய் பசை முடி வளர்ச்சிக்கு உதவுதால், மேலும் இது முடி உதிர்தலை தடுக்கிறது.

ஆண்மை விருத்தி

வயது முதிர்வு காரணமாக உடலுறவில் நாட்டமில்லாமல் இருப்பவர்களும் தினசரி  வெந்தயத்தை எடுத்துக்கொண்டால். 7 முதல் 10 நாட்களில் பலனைக் காணலாம்.

பசியின்மை

வெந்தயம் உணவை உடைத்து செரிக்க வைக்கும் இயல்புடையதால் வயிற்றில் உணவு தங்குவதில்லை. பசியின்மையால் அவதிப்படுபவர்களுக்கு வெந்தயம் சிறந்த மருந்து.

கொழுப்பு குறைய

உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து அவதிப்படுபவர்கள் வெந்தயத்தை தினசரி சாப்பிடலாம். இது கொழுப்புகளை சிதைத்து, வெளியேற்றி விடுகிறது.

சரும பளபளப்பு

வெந்தயத்தில் உள்ள விட்டமின் சி, பளபளப்பான சருமத்திற்கு உதவுகிறது. இதை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், வறட்சி தன்மை நீங்கி பொலிவு பெறும்.

தாய்ப்பால்

வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

சிறுநீர் பிரச்னை

வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால். இது உடலைக் குளிர்விப்பத்துடன், உடல் வறட்சியை நீக்கி சிறுநீரைப் பெருக்குகிறது. இதனால், சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

தேங்காய் எண்ணைய்யில் வெந்தயம் மற்றும் கற்பூரத்தை போட்டு நீண்ட நேரம் ஊற வைக்கவும். இதை குளிக்கும் போது தலையில் நன்கு தேய்த்து அலச பேன், பொடுகு நீங்கும்.