இரத்த உற்பத்தி

இதை வாரத்திற்கு மூன்று முறை பொடியாகவோ அல்லது நீரில் கொதிக்க வைத்தோ எடுத்துக் கொண்டால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி, இரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இதனால் இரத்தசோகை வராமல் தடுக்கலாம்

இரத்த அழுத்தம், இதய நோய்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுண்டைக்காயிற்கு உண்டு. இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இரத்தத்தில் கொழுப்பு சேர்வதையும், இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.

உடல்சோர்வு, உடல்வலி

இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடற்சோர்வு, உடல் வலி, வீக்கம் போன்றவற்றை தடுத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது.

வாய்ப்புண்

இக்காயில் நிறைந்துள்ள கசப்பு சுவை மற்றும் தைமின் போன்ற விட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், வாய்ப்புண்கள் உருவாவதையும், சொத்தை பல் ஏற்படுவதையும் தடுக்கக்கூடியது.

சர்க்கரை நோய்

சுண்டைக்காய் பொடியுடன், நெல்லிக்காய் பொடி சம அளவு கலந்து கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நீரிலிட்டு கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

இரத்த சுத்திகரிப்பு

சுண்டைக்காய் பொடியை மோரில் கலந்து அடிக்கடி எடுத்துக் கொண்டால் இரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும், சிறுநீரை பெருக்கச் செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

தாய்ப்பால் சுரப்பு

தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும் பெண்கள். சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வதக்கி சூடான சாதத்துடன் சேர்த்து உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

அல்சர், வயிற்றுப் பிரச்சனை

சுண்டைக்காய் பொடியுடன் கறிவேப்பிலை பொடி சம அளவு கலந்து கொண்டு. ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால். வயிற்றுப் புண்கள், குடல் புண்கள், நெஞ்செரிச்சல் படிப்படியாக குணமாகும்.