தாவரவியல் பெயர்      : நெப்ஃகிலியம் லப்பசியம் வரிசை     : சான்டல்ஸ் குடும்பம் : சாபின்டாசியே தாயகம்   : இந்தோனேசியா

ரம்புட்டான் பழம்

1

ரம்புட்டான் பழத்தினை உண்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அளவு உயர்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை உடல் முழுவதும் பரவ செய்யவும் இப்பபழம் உதவுகிறது.

ஹீமோகுளோபின்

2

இப்பழம் கொண்டிருக்கும் ஒலிக் மற்றும் ஈகோ பாட்டு கொழுப்பு அமிலங்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.இதில் உள்ள சத்துக்கள் சரும வறட்சியை மாற்றி முழு சரீர சருமத்தையும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

சரும பாதுகாப்பு

3

ரம்புட்டான் பழத்தில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் சி சத்து நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

4

நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க செய்ய இப்பழமானது துணை புரிகிறது.இதில் காணப்படும் நார்ச்சத்து இன்னும் உணவை எளிதில் செரிமானம் அடைய செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

 செரிமானத்திற்கு

5

இப்பழத்தில் காணப்படும் எண்ணற்ற சத்துக்கள் அனைத்தும் கர்ப்பகால பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல ஊட்டச்சத்தாக இப்பழம் காணப்படுகிறது

 கர்ப்பிணிகளுக்கு

6

இப்பழத்தில் உள்ள நீர் சத்தானது தாகத்தை தணிப்பதுடன், இழந்த ஆற்றலை உடலுக்கு திரும்ப கொடுக்கிறது.

ஆற்றல் ஊக்கி

7

இதில் காணப்படும் பாஸ்பரஸ் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சிறுநீரகம் நன்கு செயல்பட உதவுகிறது.

சிறுநீரக செயல்பாட்டிற்கு