ஒற்றைத் தலைவலி

அன்னாசி பழத்துடன் தேன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது, அது ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துகிறது.

இரத்த சோகை

அன்னாசி பழவற்றலை, ஒரு டம்ளர் பாலில்ஊற வைத்து தினமும் இரவு தூங்கும் முன்பு குடித்து வர வேண்டும். இதனால் உடலில் இரத்தத்தின் அளவானது அதிகரிக்கப்பட்டு இரத்த சோகை எனப்படும் அனிமியாவானது குணமாகும்.

மனப்பதட்டம், மனச்சோர்வு

அன்னாசி பல சாற்றை குடித்து வரும் பொழுது அதில் உள்ள வைட்டமின் பி ஆனது ஹார்மோன்களின் வளர்ச்சியை சீராக்கி மனப்பதட்டம், மனச்சோர்வு போன்றவற்றை நீக்குகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது

இதில் அதிக அளவு மாங்கனிசு சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது எலும்புகளை உறுதியாகிறது. மேலும் எலும்பு திசுக்களையும் வலுவாக்குகிறது.

கண்

அன்னாசி பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கண்களின் பார்வையை தெளிவாகிறது.

சரும  புற்றுநோய்

இதில் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளதனால் சரும செல்களை பாதுகாத்து சரும  புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

இதய ஆரோக்கியம்

அன்னாசி பழம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியமானது மேம்படுத்தப்படுகிறது.

வயிற்றுப் புழுக்கள்

அன்னாசி பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது அதில் உள்ள பொம்மைலின் என்னும் நொதியானது வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றுகிறது. இதனால் வயிற்றுப் புழுக்கள் நீக்கப்படும்.