கண்கள்

பப்பாளியில் அதிக அளவு விட்டமின் ஏ நிறைந்துள்ளதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.மேலும் மாலைக்கண், கிட்ட பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

நரம்பு தளர்ச்சி

தினமும் காலையில் நன்றாக பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால், நரம்பு தளர்ச்சி குறைபாடு விரைவில் நீங்கும்.

மலச்சிக்கல்

இதனை தினமும் சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும் உதவுகிறது.

சருமத்திர்க்கு

பப்பாளியில் அதிக அளவு விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை சருமத்தை பொலிவாகவும் மற்றும் அழகாக மாற்றுகிறது. மேலும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

புற்றுநோய்

பப்பாளியில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால் இது புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.

இதயத்திற்கு

இதயத்திற்கும் பொட்டாஷியம் சத்து மிகவும் அவசியமானது.மேலும் இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து, இதயத்திற்கு சரியான அளவில் இரத்தம் சென்று வர பப்பாளி பழத்தில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியம்

சிலருக்கு கல்லீரலில் அதிகம் நச்சுகள் சேர்வதாலும், அதீத சுழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது.தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

நீரிழிவு

பப்பாளியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்கும்.

மலட்டுத்தன்மை

பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். எனவே இதை சாப்பிடும் ஆண்களுக்கு மலட்டு தன்மை முற்றிலும் நீங்கும்.