செல்கள் சேதம் அடைவதை தடுக்கிறது

இது இயற்கையாகவே ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டுள்ளதால். உடலில் உள்ள ஃப்ரீராடிக்கல்களை வெளியேற்றி, செல்கள் சேதம் அடைவதை தடுக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது

தக்காளியில் நிறைந்துள்ள லைக்கோ பின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது.இதனால் பிரஸ்டேட் புற்றுநோய், வயிறு மற்றும் பெருங்குடல் தொடர்பான புற்று நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

புகைப்பழக்கம்

தக்காளியில் நிறைந்துள்ள குளோரோஜெனிக் போன்ற முக்கிய அமினோ அமிலங்கள், புகை பிடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம், இதய நோயை குறைக்கிறது

இதில் நிறைந்துள்ள விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்களும், ஆன்டிஆக்சிடென்ட் பண்புகளும். இரத்த ஓட்டத்தை சீராக்கும்.மேலும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

இரத்தம் உறைதலுக்கு உதவுகிறது

தக்காளியில் நிறைந்துள்ள விட்டமின் கே சத்தானது இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரும அழகை அதிகரிக்கிறது

தக்காளியை விழுதாக அரைத்து வாரத்திற்கு இரண்டு முறை முகத்தின் மேல் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரல் கழுவி வந்தால். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அதிக அளவு எண்ணெய் பசையை நீக்கி. முகப்பரு, கரும்புள்ளிகளை குறைத்து முக அழகை அதிகரிக்க உதவும்.

கண் பார்வையை அதிகரிக்கிறது

தக்காளியில் இருக்கும் விட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை மேம்படுத்துகிறது. முக்கியமாக மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

தக்காளியின் குரோமியம் சத்து அதிக அளவில் உள்ளது. இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது

இதில் உள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்து, போக் போன்றவை உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி இரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.