மாரடைப்பு

வெங்காயம் தமனிச் சுவர்களின் கொழுப்பு படிவதை தடுத்து, தமணி தடிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.இதன் மூலமாக மாரடைப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

சுவாச பிரச்சனை

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வர, இதில் இருக்கக்கூடிய அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், சுவாச குழாய் தசைகளை ஓய்வு பெற செய்து எளிதில் சுருங்கி விரிய உதவி செய்கிறது.

அல்சர்

இதில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்கள், அல்சர் என்று சொல்லக்கூடிய இறப்பை புண்கள் வராமல் தடுக்கும்.இதன் காரணமாகத்தான் காரமான உணவுகளை பரிமாறும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக வைத்து பரிமாறுவது உண்டு.

மலச்சிக்கல்

பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் வயிற்றில் நல்ல பாக்டீரியாவின் அளவை அதிகரிக்கும். மற்றும் இது குடலின் இயக்கத்தையும் சீராக்கும்.இதன் மூலமாக மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

இரத்த அழுத்தம்

வெங்காயத்தில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவு. மேலும் கொழுப்புகள் கிடையாது. இது இரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, உயரத்த அழுத்தத்தை குறைக்கும்.

இரத்தம் சுத்தமாகும்

வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிட்டு வர இது உடலில் தீங்கு விளைவிக்க கூடிய தாக்கங்களை வெளியேற்றும்.இதன் மூலமாக இரத்தம் சுத்தமாகும் மற்றும் உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் உதவி செய்யும்.

ஆண்மை குறைபாடு

சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வர வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருட்கள் நரம்புகளை வலுவாக்கும்.இதன் மூலமாக ஆண்மை குறைபாடு நீங்கும்.

தாய்ப்பால் சுரப்பு

குழந்தை பெற்ற தாய்மார்கள், தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ளவர்கள். சிறிது வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.