நோய் எதிர்ப்பு சக்தி

பலாப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான விட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது.இதன் மூலமாக கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளான சின்னம்மை, மெட்ராஸை, வேர்க்குரு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் வராமலும் பாதுகாக்க கூடியது பலாப்பழம்.

மலச்சிக்கல்

பலாப்பழத்தில் இருக்கக்கூடிய இன்சாலிப்பில் பைபர் என்னும் கரையாத நார்ச்சத்து மலக்குடலில் தேங்கியுள்ள கழிவுகளை எளிதில் வெளியேற உதவி செய்யும். இதன் மூலமாக மலச்சிக்கலையும் தடுக்கக் கூடியது பலாப்பழம்.

எலும்புகளை வலுவாக்கும்

பலாப்பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் மிகவும் அவசியமான கால்சியம் சத்து நல்ல அளவில் உள்ளது.எனவே எலும்பு சம்பந்தமான பிரச்சினை வராமல் தடுக்க வேண்டும், எலும்புகளை வலுவாக்க வேண்டும் என நினைப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு பழம் பலாப்பழம்.

இரத்த சோகை

அனிமியா என சொல்லக்கூடிய இரத்தசோகை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம் அயன் (iron) என்று சொல்லக் கூடிய இரும்புச்சத்து உடலில் குறைவாக இருப்பது தான் காரணம்.இது உடலில் புதிய சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதோடு, இரத்த சோகை வராமல் தடுக்கும். எனவே இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

கண் பார்வை

பலாப்பழத்தில் உள்ள மஞ்சள் நிறத்திற்கு காரணம், இதில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின் சத்து அதிகம் இருப்பது தான்.இது கண் காருண்யா செல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கண் பார்வை திறனை அதிகரிக்கும்.

கேன்சர்

ஆன்ட்டி கேன்சர் பிராப்பர்டீஸ் (aunti - cancer properties) அதிகம் நிறைந்துள்ள பழங்களில் மிக முக்கியமான பழம் பலாப்பழம் .பலாப்பழத்தில் lignans, isoflavones, saponins, flavonoids மற்றும் carotenoids ஆன்ட்டி கேன்சர் பிராப்பர்ட்டீஸ் அதிகம் நிறைந்துள்ளது. இது கேன்சர் உருவாவதற்கு காரணமான ஃப்ரீரடிகல் என்னும் செல்களை உடலில் இருந்து வெளியேற்றி கேன்சர் வராமல் தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக இது ஒரு மீடியம் கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட ஒரு பழம்.எனவே சர்க்கரை நோயாளிகள் அளவாக சாப்பிட ஒரு சிறந்த பழம் இந்த பலாப்பழம்.

தைராய்டு சுறப்பை சீராக்கும்

தைராய்டு கார்மென்ட் மெட்டபாலிசம் சீராக நடைபெற மிகவும் அவசியமான சத்து காப்பர் சத்து. பலாப்பழத்தில் இந்த காப்பர் சத்து நல்ல அளவில் உள்ளது.எனவே தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த பலாப்பழத்தை சாப்பிட நல்ல ஒரு நிவாரத்தை கொடுக்கும்.

நரம்புகளை வலுவாக்கும்

பலாப்பழத்தில் நரம்புகளை வலுவாக்க தேவையான தயாமின் மற்றும் நியாஸின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது.ந்த பலாப்பழத்தை சாப்பிட்டு வர இது உடலுக்கு நல்ல சக்தியை கொடுப்பதோடு, நரம்புகளில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். இதன் மூலமாக நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்தக் கூடியது பலாப்பழம்.