புற்றுநோய்

மிளகில் இருக்கக்கூடிய பிபெரின் (piperine) புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த மிளகை மஞ்சளுடன் சேர்க்கும் போது புற்றுநோய் எதிர்ப்பு குணங்கள் மேலும் அதிகம் ஆகும்.

செரிமான திறன்

செரிமானத்திற்கு பெரிதும் உதவக்கூடியது இந்த மிளகு. இதற்குக் காரணம் என்னவென்றால் மிளகில் உள்ள பெப்பரைன் 95% (piperine) என்கின்ற பொருள்தான்.பெப்பரைன் வயிற்றில் இருக்கக்கூடிய ஹைட்ரோகிலாரிக் ஆசிட்டை அதிக அளவில் சுரப்பதற்கு தூண்டுகோலாக உள்ளது.

உடல் எடை

மிளகில் உள்ள கருப்பு நிற மேல் தோலில் அதிகப்படியான பைட்டோ நியூட்ரியன்ஸ் என்ற பொருள் அதிக அளவில் உள்ளது. இது இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பினை உடைத்து எரியும் தன்மை இதற்கு உண்டு.

வயிற்று பிரச்சனை

வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கக் கூடியது இந்த மிளகு.

பொடுகு 

தலையில் இருக்கக்கூடிய பொடுகை போக்கக்கூடியது மிளகு. இதற்குக் காரணம் மிளகில் இருக்கக்கூடிய நன்மை செய்யக்கூடிய பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு குணங்கள் தான் இதற்கு காரணம்.

சளி, இருமல்

சளி, இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு இது போன்ற ஜலதோஷ சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை தரக்கூடியது இந்த மிளகு.ஒரு டம்ளர் பாலுடன் ஒரு கிராம் மிளகுத்தூள் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தினமும் காலை மற்றும் மாலை இருவேளை இதனை குடித்து வர ஜலதோஷம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

பசியின்மை

கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் நாக்கில் இருக்கக்கூடிய சுவை அரும்புகளை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. மிளகின் இந்த குணமானது பசியின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு இயற்கையான ஒரு மருந்தாக விளங்க கூடியது.

மன அழுத்தம்

கருப்பு மிளகில் உள்ள பெப்பரை மூளையில் உள்ள அறிவுத்திறன் அமைப்பை அதிகரிக்க செய்யக்கூடியது, மேலும் மன அழுத்தத்தையும் குறைக்கக்கூடியது என்று ஜென்ரல் ஆஃப் ஃபுட் கெமிக்கல் ஆக்சனாலஜி கூறி உள்ளனர்.