உளுத்தம் பருப்பின் மருத்துவ பயன்கள் | Ulutham paruppu Benefits in Tamil

உளுத்தம் பருப்பின் மருத்துவ பயன்கள் | Ulutham paruppu Benefits in Tamil

உளுந்தம் பருப்பின் மருத்துவ பயன்கள் Ulutham paruppu Benefits in Tamil

உளுத்தம் பருப்பின் மருத்துவ பயன்கள் |

  Ulutham paruppu Benefits in Tamil உடலுக்கு வலுவை தரும் இந்திய பயிர்களில் உளுந்து முக்கியமானதாகும். கருப்பு உளுந்து (Black gram) செரிமானமாக கடினமாக இருப்பதுடன் வாயு தொல்லையையும் ஏற்படுத்தும்.இதை தவிர்க்கவே அதனுடன் “பெருங்காயம் மற்றும் பிரியாணி இலையை” சேர்த்து பயன்படுத்தும் முறையை நாம் முன்னோர் பின்பற்றினர் அதேபோல் சுத்தமான வெண்ணை சேர்த்து சாப்பிடுவதனால் வாயு உண்டாவதனை தடுக்கலாம்.

செரிமானதிறனைஅதிகரிக்கின்றது

   கருப்பு உளுந்துல நார்ச்சத்து அதிகமாக இருக்கு. கருப்பு உளுந்த அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளில் செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

இரத்த சோகையை தடுகிறதுஉளுத்தம் பருப்பின் மருத்துவ பயன்கள் Ulutham paruppu Benefits in Tamil (7)

  உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு “அனுமியா” எனப்படும் இரத்த சோகை நோய் ஏற்ப்பாடுகிறது. கருப்பு உளுந்தில்  இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால்.கருப்பு உளுந்து கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி  கொடுப்பதால் “இரத்த சோகை” நோய் விரைவில் குணமாகும்.

எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமைபெறுகிறது

  நமக்கு வயது ஏற ஏற நமது உடலில் இருக்கும் எலும்புகளும் மூட்டு பகுதிகளிலும் வலிமை குன்றி உடல் இயக்கத்தை குறைத்து விடும் ஆபத்து இருக்கும்.

  கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம்,இரும்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால்.கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் “உடலில் எலும்புகள் மற்றும் மூட்டுகளுடைய வலிமை” அதிகரிக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலைபடுதிகின்றது

  நீரிழிவு நோய் ஒரு கொடுமையான வியாதி என கூறப்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டவர்கள் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை சாபிடவேண்டும்.

  கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகமா இருப்பதால். இதை  சாப்பிடும் போது எந்த  வகையான உணவுகளிலும், இருக்கும் சத்துக்களையும் சரி செய்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிதமான அளவில் வைத்திருக்க உதவுது.

புண்கள் மற்றும் காயங்களை விரைவில் குணமடைய செய்கிறது

     நமது பண்டைய இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சருமம்  சம்பந்தமான வியாதி பிரச்சனைகளை போக்க கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் பரிந்துரைக்கின்றனர்.

  தோல்களில்  ஏற்படும் தழும்புகள்மற்றும்அதீத சூரிய ஒளியால் தோல் கருத்து போகுதல், உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு கருப்பு உளுந்தினை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் குணமடைகிறது.

  எதிர்பாராத விதமாக அடிபடுதல், விபத்து போன்றவைகளால் ஏற்படும் காயங்களால், சமயத்தில் உள் காயங்கள் உண்டாகும் அத்தகைய பிரச்சினைகளுக்கு, கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் காயப்பட்ட இடத்தில் உள்ள புண்களையும் காயங்களையும் விரைவில் குணமடைய செய்கிறது.

இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

 நமது இதயம் நன்றாக இருக்கவேண்டும்  என்றால். நமது உணவில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகமாக இருப்பது உறுதி செய்து கொள்ள வேண்டும். 

   இந்த சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கருப்பு உளுந்தினை கொண்டு செய்த உணவினை சாப்பிடுவதனால் நமது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளம் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

நரம்பு மண்டலத்தினை சீரக்குகிறது

  இன்று பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் மிகுந்த ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. இதனால் மூளை மற்றும் உடலில் இருக்கும் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றது.

  கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதனால் நரம்பு மண்டலத்தினை ஆக்கப்படுத்தி நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை தீர்க்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 

உளுத்தம் பருப்பின் மருத்துவ பயன்கள் Ulutham paruppu Benefits in Tamil (3)

  பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இளம் வயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை அதிக நபருக்கு உடல் மற்றும் மனம் எளிதில் சோர்ந்து விடுகிறது. இதற்கு உடலில் சரியான சத்துக்கள் இல்லாதது ஒரு காரணமா இருக்கு.   

   உளுந்துல உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாகவே உள்ளது. அதனால் கருப்பு உளுந்து அதிகமாக உட்கொள்வது உடல் உற்சாகமடைந்து சக்தி அதிகரித்து நீண்ட நேரம் செயலாற்றக்கூடிய ஆற்றல் கிடைக்கும்.

வயிற்றுப்போக்கினை நிறுத்துகிறது

  உளுந்து நார்ச்சத்து அதிகமாகக் கொண்டது உளுந்தங்கஞ்சி சாப்பிட்டு வருவதனால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. சீதபேதி எனப்படும் மிகக் கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களும் உளுந்தின் களியை சாப்பிடுவதனால் வயிற்றுப்போக்கு நிறுத்தி உடலுக்கு பலத்தை சேர்க்கிறது.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற செய்கிறது

  மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.சிறுநீரகங்களில் கழிவு பொருட்கள் தங்கி கற்களாக உருமாறுவது  உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களுடைய  செயல்பாடு மேம்படும்.

  சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளியேறச் செய்யும்.

தசை அடர்த்தி அதிகமாகவும், வலிமையாகவும் மாற்றுகிறது

  உடலுடைய வலிமைக்கு காரணமாக இருப்பது தசை தான் கடினமானகாரியங்களை செய்வதற்கு உடலில் தசை அடர்த்தி அதிகமாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

  உளுந்தங்களியை தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட்டு வருபவர்களுக்கு தசைகள் நன்கு வலிமை அடையும். உடல் மிகவும் மெலிந்தவர்கள் உளுந்தங்களியை அதிகமாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

உளுந்தங்களி சாப்பிடுவதனால் உடலில் இரும்புச் சத்து அதிகரித்து தாய்க்கும் சேய்க்கும் “நோய் எதிர்ப்பு திறனை” அதிகரிக்கிறது.

  குழந்தை பெற்ற பெண்கள் உளுந்தங்களி சாப்பிடால் “தாய்ப்பால்” அதிகம் சுரக்கும்.

முடி கொட்டுதல் பிரச்சனைகளை தடுகிறது

உளுத்தம் பருப்பின் மருத்துவ பயன்கள் Ulutham paruppu Benefits in Tamil (4)

  இன்று இளம் தலைமுறைக்கும் தலைமுடி கொட்டுதல் பிரச்சனை அதிகமா இருப்பதால். இதற்கு தீர்வாக பக்கவிளைவு ஏற்படுத்துகின்ற ரசாயனங்கள்  மற்றும் மருந்துகள் உட்கொள்வதை விட உளுந்தங்களி சாப்பிட்டு வந்தால்  தலைமுடி வேர்கள் அதிக பலம் பெற்று முடி உதிர்வதை தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தினை சீராக்குகிறது

  உளுந்து “பொட்டாசியம்” சத்துக்களை அதிகமா கொண்டுள்ளது. உளுந்தங்களி சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும் பொட்டாசிய சத்து உடலில் ரத்த அழுத்தத்தினை சீராக்கி ரத்தத்தை உடலில் பாய்ச்சும் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைக்கிறது.

   உளுந்தானது உடலில் யூரிக் அமிலத்தின் அளவினை அதிகரிக்கச் செய்யும்.அதனால் “கீழ்வாதம் சிறுநீரக கற்கள் ஆகியவற்றால் பாதிப்படைந்தவர்கள் உளுந்தினை தவிர்ப்பது நல்லது”.

  உளுந்தில் இருக்கும் புராத சத்தானது தசைகளுடைய வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் தசைகளை உறுதியாகவும்,அழகாகவும் மாற்றுகிறது. அதனால் உளுந்தினை உண்டு ஆரோக்கியமான தசைகளை பெறலாம்.

சருமத்தை அழகாக்குகிறது

  உளுந்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் சரும அலர்ஜி,பரு , சரும காயங்கள், கரும்புள்ளிகள் உள்ளிட்ட சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தருகின்றது. மேலும் சரும மேற்பரப்பு முழுமையாகும்.

  சீராக ரத்த ஓட்டம் ஏற்பட செய்து சருமத்தை அழகாகவும், இளமையாகவும் இருக்க உதவுகிறது. மேலும் உளுந்தினை உண்டும் சருமத்தில் பூசியும் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

  உளுந்தில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் எடும்புகளுடைய  வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு பெறுகிறது.

  அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான தாது உப்புகளை கொண்டிருக்கின்ற உளுந்தினை அடிக்கடி அணைத்து வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

  உளுந்தில் இருக்கிற தாதுஉப்புகள் மற்றும் விட்டமின் உடலில் சீரான வளர்ச்சிதை மாற்றத்தினை நடைபெற உதவுவதோடு உடலில் வலி உள்ள பகுதியை சரி செய்ய வழிவகை செய்கிறது.

அலர்ஜியிலிருந்து பாதுகாக்கிறது

 “உளுந்தினை முட்டை மற்றும் பஞ்சுடன் சேர்த்து எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டப்படும் பழக்கம் நாட்டு மருத்துவத்தில் உள்ளது”.மேலும் உளுந்தில் உள்ள  பண்பானது உடலில் அலர்ஜியிலிருந்து பாதுகாக்கிறது

எலும்பு வளர்ச்சி

  உளுந்தில் உள்ள கால்சியம்,மெக்னீசியம், பொட்டாசியம் பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை எலும்புகள் வளர்ச்சிக்கு பெரும் அளவில் உதவி புரிகிறது. மனச்சோர்வு, நரம்பு பலவீனம், நினைவாற்றல் குறைவு போன்ற  நரம்பு சம்பந்தமான குறைபாடுகளுக்கு உளுந்தானது முழுமையாக குணப்படுத்த இயலாவிட்டாலும் ஆறுதல் அளிக்கிறது.

இரத்த ஓட்டத்தை சீரக்குகிறது

  உளுந்தில் இருக்கும் ஊட்டச்சத்து மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கின்றன. இதனால் நரம்பு சம்பந்தமான குறைபாடுகளுக்கு உளுந்தினை உண்டு ஆறுதல் பெறலாம்.

  இரும்பு சத்தானது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. இரும்பு சத்தானது ரத்த சிவப்பணுக்களுடைய உற்பத்தியை அதிகரிக்க செய்வதோடு உடலில் இருக்கின்ற அனைத்து பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவுகிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ள உளுந்தினை உண்டு ஆற்றலை பெறலாம்.

உளுந்தங்களி செய்முறை 

உளுத்தம் பருப்பின் மருத்துவ பயன்கள் Ulutham paruppu Benefits in Tamil (5)

   பாத்திரத்தில் 100 கிராம் கருப்பு உளுத்தம் பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிதமான சூட்டுல ரெண்டு நிமிடம் நன்றாக வதக்கிக்கோங்க, சிவப்பு நிறம் வரும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும், நீங்க வதக்கும்போதே அந்த நிற வித்தியாசம் உங்களுக்கு தெரியும்.

  கருப்பா இருக்கிறது கொஞ்சம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமாக மாரிய பின்னர், இதுல கால் கப் அளவுக்கு சாப்பிடும் அரிசியை சேர்த்துக் பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்,பிறகு இதனை ஆற வைத்து அம்மியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

   பிறகு ஒரு பாத்திரத்தில் நான்கு ஏலக்காய் எடுத்து கொள்ளவும் பிறகு அரைத்து வைத்திருக்கும் உளுந்து மற்றும் அரிசியின் மாவினை எடுத்துகொள்ளவும், இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இப்பொழுது நீங்கள் அடுப்பினை பற்ற வைக்க வேண்டாம், அப்படி பற்ற வைத்தால் கட்டி கட்டியாக இந்த மாவு சேர்ந்து விடும்.

   இப்பொழுது அடுப்பினை பற்றவைத்து மிதமான சூட்டில்  ஐந்து நிமிடம் நன்றாக கிளறி விடவும். இதில் இனிப்பிற்கு வெல்லம், சர்க்கரை, நாட்டுச்சக்கரை இவற்றில் எது தேவை என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம் . கெட்டியாக ஆன பின்னர் நல்லெண்ணையை விட்டு கைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும், இப்பொழுது சுவையான உளுந்தங்களி தயார்.

       இதனை மாதத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது

உளுந்தங்கஞ்சி செய்முறை 

உளுத்தம் பருப்பின் மருத்துவ பயன்கள் Ulutham paruppu Benefits in Tamil (6)

     ஊற வைத்த உளுந்து மற்றும் சுக்கினை அம்மியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

     தண்ணீர் நன்றாக சேர்த்து கைகளினால் நன்றாக கலந்து கொள்ளவும் ஏனென்றல் கட்டி கட்டியாக இருந்தால் குழந்தைகள் சாப்பிட கடினமாக இருக்கும் .

     இப்பொழுது அடுப்பினை பற்றவைத்து அடி பிடிக்காமல் நன்றாக கிளறி வரவும். உளுந்தோட பச்சை வாசனை எல்லாம் போய் நன்றாக வேகும் வரை காத்திருக்கவும் . உளுந்தின் பச்சிலை வாசனை அடித்திருந்தால்  சாப்பிடுவதற்கு நல்லா இருக்காது .

   மாவு நல்ல கூழ் பதம் வந்த பிறகு இதனை வெந்துருச்சா இல்லையான்னு பார்ப்போம்.ஒரு பாத்திரத்தில் தண்ணி வைத்து அதுல இதனை சிறிதளவு போடவேண்டும், அந்த உளுந்து கரையாமல் கெட்டியாக பால் மாதிரி நிற்கும் இருந்தால் இது தயார் ஆகிவிட்டது என அர்த்தம்.

    இதில் ரெண்டு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும் இதுக்கு கருப்பட்டி தேவை என்றாள் சேர்த்து கொள்ளலாம் . நிறைய பேருக்கு வீட்டில் கருப்பட்டி வச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு இருப்பாங்க, கருப்பட்டியை நீங்க இந்த மாதிரி உளுந்து கஞ்சிக்கு போட்டு சாப்பிட்டீங்கன்னா அருமயான சுவையாக இருக்கும்.இனிப்பு தேவை என்றாள் கடைசியாக சேர்த்து கொல்லலாம்.

    ‘இது குழந்தைகளுக்கு நெஞ்சு சளி இருக்கும் போது நல்லெண்ணெய் கலந்து இது கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது’, இது குழந்தைகளுக்கு மட்டும் இல்லைங்க பெரியவங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

    உளுந்து எலும்புகளை பலப்படுத்தும் கர்பமாக இருக்கிறவங்க இதை சாப்பிட்டாங்கன்னா இடுப்பு எலும்புகள் எல்லாம் நல்லா வலுவடையும்.குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்தாய்மார்கள் இதை சாப்பிடுவதனால் நல்ல பால் ஊறும்.

  வயதனர்வகள் இதனை சாப்பிடும்போது எலும்பு நல்ல வலுவடைந்து கால் வலி இருக்காது. இதை வாரத்துல ஒரு நாள் காலையில் இதனை செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் பொழுது உடல் நலத்தினை மேம்படுதிகிறது.

  இதனை உங்களுக்கு தேவையான பதத்தில் எடுத்தது கொள்ளலாம். குழந்தைகளுக்கு கொஞ்சம் கட்டியாக இருந்தால் எளிதில் கொடுக்க முடியும். இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து உண்ணும் பொழுது  சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.

 

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?