துவாரம் பருப்பு| Thuvaram paruppu in Tamil

துவாரம் பருப்பு

Thuvaram paruppu in Tamil

    நம் அன்றாட வாழ்வில் எராளமான சத்து நிறைந்த பருப்பு வகைகள் உள்ளது. அதில்நாம் அடிக்கடிபயன்படுத்தும்துவரம்பருபினைபற்றிபார்போம்.

Thuvaram paruppu in Tamil (10)

புரதச்சத்து

   துவரம் பருப்பில் உள்ள முதல் ஊட்டச்சத்தாக புரோட்டின் என்று சொல்லக்கூடிய புரதச்சத்து உள்ளது .

தசை வளர்ச்சி 

Thuvaram paruppu in Tamil

   இந்த சத்தானது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இந்த துவரம் பருப்பு உள்ளது.

இரும்புச் சத்து

இரத்தசோகை

Thuvaram paruppu in Tamil (1)

   துவரம் பருப்பில் இருக்கக்கூடிய இரும்புச் சத்து என்கின்ற ஒரு முக்கியமான ஊட்டச்சத்து சத்து ஆகும். இது இரத்தசோகை பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

   நம் இரத்தத்தில் உள்ள இரத்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை எப்பொழுதுமே சரியான அளவில் வைக்கின்றது. இதனால் அனிமியா என சொல்லக்கூடிய இரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

   இந்த இரும்பு சத்தானது இரத்த சோகையை தடுக்க மட்டும் கிடையாது இன்னும் ஒரு சில நன்மைகளை இது செய்கின்றது. அவை நம் உடம்பிற்கு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகமாக்குகிறது,மற்றும் தசைப்பகுதியை மிகவும் ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.

   அதேபோல் மூளையின் செயல்பாட்டிற்கும் இந்த இரும்புச்சத்து முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாகும்.

உடல்வெப்பம்

    இது மட்டும் இன்றி நம் உடம்பில் உள்ள வெப்பம் எப்பொழுதுமே சீரான அளவில் வைத்திருக்கும் தன்மையை கொண்டுள்ளது.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்

   துவரம் பருப்பில் உள்ள மூன்றாவது முக்கியமான ஊட்டச்சத்து கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகும்.

எழும்பின் அடர்த்தி

   இந்த இரண்டு ஊட்டச்சத்துமே எழும்பின் அடர்த்தியை சீரான அளவில் வைத்திருக்கும்.
   அது மட்டுமல்லாமல் பிற்காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு வியாதியும் ஏற்படாமல் தடுக்கும்.

   இது நம் பற்களையும் மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நார்ச்சத்து

செரிமான திறன் 

   அடுத்த ஊட்டச்சத்து என்னவென்றால் நார்ச்சத்து. இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்,செரிமான திறனை ஊக்க படுத்தும், செரிமானம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையுமே ஏற்படாமல் தடுத்து குடல் பகுதியை மிகவும் தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் செயல்பட செய்கிறது.

போலிக் ஆசிட்

கரு சிதைவு

   மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்து போலிக் ஆசிட் என்பது.இந்த ஊட்டச்சத்தானது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் தேவையான ஒரு ஊட்டச்சத்தாக இது உள்ளது. சிலருக்கு அடிக்கடி கரு சிதைவு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் இதற்கு போலிக் ஆசிட் ஆனது கருச்சிதைவை ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குகிறது.

குழந்தையின் மூளை குறைபாடுl

   இது காய்ச்சலை குணப்படுத்துகிறது. மேலும் கர்ப்ப காலங்களில் துவரம் பருப்பு அடிக்கடி சேர்க்கும் பொழுது பிறக்கின்ற உங்களுடைய குழந்தையின் மூளை குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.

   இது குழந்தையின் முதுகுத்தண்டில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கின்றது.

   குழந்தை கரு மிகவும் ஆரோக்கியமாக வளர்வதற்கு மிகவும் தேவையான ஒரு ஊட்டச்சத்து இந்த போலிக் ஆசிட்.

   இதனால் பெண்கள் கர்ப்ப காலத்தில் துவரம் பருப்பு சேர்த்து வருவது மிகவும் நல்லது.

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம்

   அடுத்ததாக மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்து மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகும்.

இரத்த அழுத்தம்Thuvaram paruppu in Tamil (3)

   இது இரத்த அழுத்தத்தை எப்பொழுதுமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பதன் மூலமாக எப்பொழுதும் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகளும் ஏற்படாமல் தடுக்க முடியும்.
பொட்டாசியம் என்பது நம் உடல் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை கரைக்கின்றது.

மாரடைப்பு 

   மெக்னிசியமானது நல்ல கொழுப்பின் அளவை பராமரித்து கெட்ட கொழுப்பு அதிக அளவில் தங்காமல் தடுக்கிறது.

   இதனால் இரத்தக் குழாய் வீக்கம் அடைந்து மாரடைப்பு ஏற்படுவதனை தடுக்கலாம் மேலும் ரத்த ஓட்டம் சீராக செயல்படும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

தலை முடி உதிர்வு

Thuvaram paruppu in Tamil (4)

   நாம் அடுத்ததாக பார்க்கக்கூடிய சத்தானது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இது தலை முடி உதிர்வதை தடுக்கின்றது

   சரும  பாதுகாப்பு

   சருமத்தை மிகவும் பாதுகாப்பாக  வைத்திருக்கும். சர்மம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.

   இது மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து மூளையின் ரத்த ஓட்டத்தினை சீராக வைக்கின்றது. மேலும் மூளையினை சுறுசுறுப்பாக செயல்பட்டு செயல்படுவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.

உடல் எடை 

  இது மட்டும் இன்றி துவரம் பருப்பினை நம் உணவில் அடிக்கடி சேர்ப்பதனால் உடல் எடையை சீராக்குகிறது.

நீரழிவு நோய்

Thuvaram paruppu in Tamil (5)

  இது நீரழிவு நோய் ஏற்படாமலும் தடுக்கின்றது.நீரழிவு நோய் உள்ளவர்கள் மதிய உணவில் இந்த பருப்பினை வேகவைத்து சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

துவரம் பருப்பு உருண்டை குழம்பு

Thuvaram paruppu in Tamil (7)

தேவையான பொருட்கள்

 • வெங்காயம் 2
 • புளி
 • பூண்டு 1
 • கறிவேப்பிலை
 • துவரம் பருப்பு உருண்டை குழம்பு
 • தக்காளி
 • முக்கால் டம்ளர் துவரம் பருப்பு
 • கால் டம்ளர் கடலைப்பருப்பு
 • சீரகம்
 • வெந்தையம் 
 • நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய்
 • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
 • 3 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
 • தேங்காய் விழு

செய்முறை

   துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.

   மூன்று மணி நேரத்திற்கு பிறகு மிக்ஸி ஜாரில் இந்த பருப்பினை சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் சீரகம், காய்ந்த மிளகாய் இரண்டு, ஐந்து பல் பூண்டு தோலுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

   நன்றாக அறைந்த பிறகு அதனை சிறிய பாத்திரத்தில் வைத்து வெங்காயம், கருவேப்பிலை ,துருவிய தேங்காய் இரண்டு ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  இதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது இதனை சேர்ப்பதற்கு குழம்பினை தயார் செய்து கொள்ளலாம்.

  ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

  என்னை நன்றாக காய்ந்த பிறகு வெந்தையம் சேர்த்துக் கொள்ளவும்.

   வெந்தயம் நன்றாக பொரிந்ததும், அதனுடன் துவரம் பருப்பினை சேர்த்துக் கொள்ளவும், துவரம் பருப்பு நிறம் மாறும் வரை நன்றாக எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்.

  இதனுடன் சிறிதளவு கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வதங்கிக் கொள்ளவும்.

  இப்பொழுது மசாலாவை சேர்த்துக் கொள்வோம் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 3 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளவும். குழம்பிற்கு தேவையான அளவு உப்பினை சேர்த்து நன்றாக கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

   நன்றாக கொதித்த பிறகு   பருப்பு உருண்டையை சேர்த்துக் கொள்ளவும். பத்து நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும். இப்பொழுது அரைத்த தேங்காய் விழுதினை சேர்த்துக் கொள்ளவும். ஐந்து நிமிடம் கொதித்த பிறகு இறக்கிக் கொள்ளவும்.

    இப்பொழுது சுவையான துவரம் பருப்பு உருண்டை குழம்பு தயார்.

 

துவரம் பருப்பு துவையல்

Thuvaram paruppu in Tamil (8)

தேவையான பொருட்கள்

 

 • துவரம் பருப்பு 200 கிராம்
 • காய்ந்த மிளகாய் 10
 • பூண்டு 10
 • புலி சிறிய துண்டு
 • பெருங்காயம் அரை டீஸ்பூன்
 • கருவேப்பிலை தேவையான அளவு
 • கடுகு தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு
 • என்னை தேவையான அளவு

 

செய்முறை

  முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பினை சேர்த்து நன்றாக வறுக்கவும்.

   இதனுடன் பூண்டு, வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.

   ஒரு 75% இது தயாரான பிறகு எடுத்து வைத்துள்ள புலியினை சேர்த்துக் கொள்ளவும்.

   இதன் பிறகு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

   பெருங்காயம் சேர்த்த பிறகு வெகு நேரம் இதனை வறுக்க வேண்டாம். ஏனென்றால் பெருங்காயத்தின் வாசனை போய்விடும் இப்பொழுது இதனுடன் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து இதனை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

   சூடு ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் இதனை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

   இதனை தாளிப்பதற்காக பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தேவையான அளவு கடுகு சேர்த்து மூன்று வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

      இப்பொழுது சுவையான துவரம் பருப்பு துவையல் தயார்.

துவரம் பருப்பு வடை

Thuvaram paruppu in Tamil (6)

தேவையான பொருட்கள்

 • 100 கிராம் துவரம்பருப்பு
 • மூன்று மிளகாய்
 • ஒரு டீஸ்பூன் சோம்பு
 • சிறிய துண்டு இஞ்சி
 • தேவையான அளவு உப்பு
 • கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
 • ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
 • இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு துருவிய கேரட்
 • சிறிதளவு முருங்கை கீரை
 • பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம்
 • இரண்டு பல் பூண்டு

செய்முறை

    100 கிராம் துவரம்பருப்பு தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்றாக அலசிகொள்ளவும், அலசியபிறகு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.

   மூன்று மிளகாய்,ஒரு டீஸ்பூன் சோம்பு இதையும் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும், தண்ணீரில் ஊற வைக்கும்பொழுது சுலபமாக மசிந்து விடும்.

   இப்பொழுது மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள மிளகாய், சோம்பு சேர்த்துக்கொள்ளவும்.

  அடுத்து ஒரு சின்ன துண்டு இஞ்சி வெட்டி சேர்த்துக்கொள்ளவும். அடுத்து நம்ம ஊறவைத்துள்ள துவரம்பருப்பு இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

  துவரம் பருப்பினை சேர்க்கும் முன் ஊற வைத்திருந்த தண்ணீரினை நன்றாக வடித்து விடவும்.

  இதனை அரைக்கும் பொழுதே தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

   இப்பொழுது அரைத்து வைத்துள்ள பருப்பு உடன் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.

   அரிசி மாவு சேர்க்கும் பொழுது வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

    அடுத்தது இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு துருவிய கேரட், சிறிதளவு முருங்கை கீரை,பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், இரண்டு பல் பூண்டினை தட்டி சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

மேலும் படிக்க; சோயா பீன்ஸ்|Meal Maker benefits in Tamil

   பிறகு வடையை தட்டி பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு தட்டி வைத்திருக்கும் வடையை போட்டு பொரித்து எடுக்கவும்.

              இப்பொழுது சுவையான துவரம் பருப்பு வடை தயார்.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?