சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil

சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil

சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil

சூரியகாந்தி விதை பயன்கள் Sunflower Seeds in Tamil (2)

 Sunflower Seeds in Tamil. சூரியகாந்தி விதை ஆனது அனைத்து மல்லிகை கடைகளிலும் கிடைக்கும், இந்த விதையில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

சூரியகாந்தி விதை விலை 

   சூரியகாந்தி விதை 1 கிலோ அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 70 ரூபாய் 50 பைசாவுக்கும். குறைந்தபட்சமாக 40 ரூபாய் 50 பைசாவும். விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

கருநிற புள்ளிகள் மற்றும் தோல் சுருக்கத்தை நீக்குகிறது

இதில் இருக்கும் வைட்டமின் சி ஆனது முகத்தில் இருக்கும் கருநிற புள்ளிகள் மற்றும் தோல் சுருக்கம் போன்றவைகளை நீக்கி வெள்ளை நிறமாக மாற்றுகிறது.

பி சி ஓ டி பிரச்சனை சரிசெய்கிறது

   சில பெண்களுக்கு பி சி ஓ டி என்கின்ற பிரச்சனை உள்ளது.
இதனால் அவர்களுக்கு கர்ப்பம் அடைவதிலும் பிரச்சனை இருக்கும்.இந்தப் பிரச்சினையையும் கூட இந்த சூரியகாந்தி விதை குணப்படுத்துகின்றது.

        இதில் சிங்க்,மெக்னீசியம் என்கின்ற முக்கியமான தாதுக்கள் இந்த சூரியகாந்தி விதையில் உள்ளது. இது இரண்டையும் ஆன்ட்டி பி சி ஓ டி என்று கூறுவார்கள்.


அழுத்தத்தை குறைக்கிறது

          சூரியகாந்தி விதை மன அழுத்தத்தையும் குறைக்கின்றது.மற்றும் தலைவலி போன்றவற்றையும் இது குணமடைய செய்கிறது.

புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது 


     இதில் இருக்கக்கூடிய செலினியம், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் எனபடும் கேன்சர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

    இந்த விதையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை இது குணப்படுத்தும்.

உடல் எடையை பரமரிகிறது


       இந்த விதையை தினமும் உட்கொள்பவர்கள் உடல் எடையை சீராக பராமரிக்க முடியும். உடல் எடையை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

புரதம் மற்றும் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளதது

   சூரியகாந்தி பூவில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து நம் எலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.இதில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.

    குழந்தைகள் அடிக்கடி சூரியகாந்தி விதை சாப்பிட்டு வந்தால், இந்த புரோட்டின் சத்தானது அவர்களின் தசை வளர்ச்சி மட்டும் இன்றி திசு வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

ஹெச் டி எல் மற்றும் எல் டி எல் கொழுப்பு 

Sunflower Seeds in Tamil  சூரியகாந்தி விதை பயன்கள் (4)


       இது நம் உடலில் இருக்கும்” எல் டி எல் என்கின்ற கெட்ட கொழுப்பினை இது கரைக்கிறது.
நம் உடம்பிற்கு தேவையான ஹெச் டி எல் என்கின்ற நல்ல கொழுப்பினை ஊக்கப்படுத்துகிறது”.

கல்லீரல் உறுபினை சீராக்குகிறது

சூரியகாந்தி விதை பயன்கள் Sunflower Seeds in Tamil (3)

      இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.இதயம் சம்பந்தப்பட்ட மாரடைப்பு போன்றவைகள் வராமல் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த விதை உதவுகிறது. மேலும் கல்லீரல் உறுபினையும் சீராக்குகிறது.

 

மேலும் படிக்க : உளுத்தம் பருப்பின் மருத்துவ பயன்கள்

 

நீரழிவு நோயினை தடுக்கிறது

  • மன அழுத்தத்தினை குறைக்கவும், நீரழிவு நோயினை ஏற்படாமல் தடுக்கவும், சூரியகாந்தி விதை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
         
  •   டயாபட்டிஸ் உள்ளவர்கள் சூரியகாந்தி விதையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இரத்தத்தின் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துகிறது

        நம் உடலில் உள்ள இரத்தத்தின் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்க சூரியகாந்தி விதையானது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
   

     தலைமுடி உதிர்வதையும் மற்றும் அடர்த்தியாக வளர இது பயன்படுகிறது.நமது சருமம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சூரியகாந்தி விதை பயனுள்ளதாக உள்ளது.

சூரியகாந்தி விதை சாப்பிடும் முறை 

சூரியகாந்தி விதை சாப்பிடும் முறை  | Sunflower Seeds in Tamil

Sunflower Seeds in Tamil

  நண்பர்களே! அனைத்து மளிகை கடைகளிலும் இந்த சூரியகாந்தி விதை கிடைக்கும் இந்த சூரியகாந்தி விதை கருப்பு நிறத்தில் காணப்படும் இவற்றை நாம் அப்படியே சாப்பிட முடியாது.

சாப்பிடும் முறை 1

   இந்த விதையின் மேல் பகுதியில் உள்ள அதன் கருப்பு நிற தோலை நீக்க வேண்டும். அதன் பிறகு நாம் இந்த சூரியகாந்தி விதையை அப்படியே சாப்பிடலாம்.

சாப்பிடும் முறை 2

   நண்பர்களே. முதலில் அடுப்பை பத்த வைத்துக் கொள்ளவும் அதன் பிறகு ஒரு கடாயை சூடு செய்து கொள்ளவும். பிறகு தோல் நீக்கப்பட்ட சூரியகாந்தி விதையை போட்டுக் கொள்ளவும் அதனுடன் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் இவற்றை மிதமான சூட்டில் நல்லா வறுத்துக்கொள்ளவும்.

  நன்றாக வறுபட்டு பொன்னிறமாக வரும்பொழுது எடுத்து ஆற வைத்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும்போது ஆண்களுக்கும் ஆண்மையை அதிகரிக்கும்.

  இவ்வாறு செய்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருப்பதாக தோன்றினால். நீங்கள் சூரியகாந்தி விதையினை தோல் நீக்கி விட்டு அப்படியே சாப்பிடலாம்.

சூரியகாந்தி பூக்கள் 

       சூரியகாந்தி பூக்கள் அன்பு, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையைத் தரும் அடையாளமாக உலகின் பல்வேறு கலாச்சாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.பார்க்கும்பொழுது மனதிற்கு அமைதியை தரும்.சூரியகாந்தியின் அழகு மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.

    ஹிலியந்தஸ்(Helianthus) என்ற அறிவியல் பெயரைக் கொண்ட சூரியகாந்தி பற்றிய ஆச்சரியமான விஷயங்களை இப்பொலுது அறியலாம்.

    சூரியகாந்தியின் மிகவும் தனித்துவமான பண்புகளில் ஒன்று ஹீலியோட்ராபிசம்(Heliotropism) எனப்படும் ஒரு நிகழ்வாகும்.அதாவது சூரியகாந்தி பூக்கள் சூரியனை பின்தொடர்வதாகும்.சூரியகாந்தி மொட்டுக்கள் காலையில் கிழக்கு திசையில் சூரியனை நோக்கி இருக்கும்.நேரம் ஏற ஏற சூரியனின் இயக்கத்தை பின்பற்றிய படி சூரியகாந்தி பூக்களின் வளர்ச்சி இருக்கும்.

     சூரியகாந்தி பூ ஒரு நன்மைக்கு  சின்னமாக இருந்தாலும்,சிலர் சூரியகாந்தியை பார்த்தால் பயப்படுகின்றனர் அல்லது அதனை வெறுக்கின்றனர்.இதனை இழிந்தோபோபியா(Helianthophobia) என்கின்றனர்.

     சூரியகாந்தி பூக்களின் அழகை ரசிக்கும் சிலருக்கு இது விசித்த்ரமக தோன்றலாம்.ஆனால் இந்த பூவின் தோற்றம், வாசனை அல்லது அதன் சிந்தனை கூட சிலருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.

    மனித ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் சூரிய ஒளி இன்றியமையாதது. சூரிய ஒளி மனித உடலில் விட்டமின் டி உற்பத்தியை உருவாக்குகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது,நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

   மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.ஒரு சில நபர்களுக்கு அவர்களது வேலை அல்லது சூழலின் தன்மை காரணமாக அவர்களுக்கு போதுமான சூரிய ஒளி கிடைப்பதில்லை.இத்தகையோர் சூரியகாந்தி எண்ணையை உணவில் சேர்த்துக் கொள்வதால் சூரிய ஒளியில் இழக்கும் நன்மைகளை பெறலாம்.

   சூரியகாந்தி எண்ணெயில் விட்டமின் டி ,விட்டமின் ஏ மற்றும்விட்டமின் ஈ,பாஸ்பரஸ், மெக்னீசியம்,சலோனியம், காப்பர் மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளன.சூரியகாந்தி முற்றிலும் உண்ணக்கூடிய ஒரு தாவரமாகும்.

  சூரியகாந்தியின் வேர் முதல் இடை வரை, மொட்டு முதல் தண்டு வரை என அனைத்து பகுதிகளையும் உபயோகப்படுத்தலாம்.சூரியகாந்தி பூவிலிருந்து தேநீர் தயாரித்து சாப்பிடலாம்.

     சூரியகாந்தி என்றதுமே நமக்கு அதன் பிரகாசமான மஞ்சள் நிற இதழ்களும் பழுப்பு நிற மையமும் தான் ஞாபகத்திற்கு வரும், ஆனால் சூரியகாந்தி பூக்கள் மஞ்சள் நிறம் தவிர தாமிர நிறம்,பழுப்பு, ஆரஞ்சு உள்ளிட்ட இன்னும் சில நிறங்களிலும் காணப்படுகின்றன.

   குறிப்பாக சிவப்பு இதழ்களையும் அடர்பழுப்பு மையத்தையும் கொண்ட சிவப்பு சூரியகாந்தி பூக்கள் மிகவும் பிரபலமானவை.


     சுமார் ஆறடி உயரம் வளரக்கூடிய சிவப்பு சூரியகாந்தி தாவரத்தின் பூக்கள் ஒவ்வொன்றும் ஐந்து முதல் ஆறு அங்குல அகலம் இருக்கும்.

   மண்ணில் கலக்கும் நச்சுத் தன்மையை அகற்றப் பயன்படும் தாவரங்களில் சூரியகாந்தியும் ஒன்று.சூரியகாந்தி  ஆசனிக், ஈயம்,யுரேனியம் போன்ற நச்சுக்களை உறிஞ்சி மண்ணின் மாசுகளை அகற்றுகிறது.

  பேரழிவுகரமான அணு உலை வெடிப்புகளுக்கு பின்னர் அந்த பகுதியில் கலந்த மண் மாசுகளை அகற்ற மில்லியன் கணக்கான சூரியகாந்தி செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டன.

சூரியகாந்தி இலையிலன் பயன்கள்

   சூரியகாந்தி உலகின் சில பகுதிகளில் நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.சூரியகந்தி இலையில் தயாரிக்கப்படும் டீயணது காய்ச்சல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒரு மருந்தாக பயன்படுகிறது.

   சூரியகாந்தியின் இலைகளை அரைத்த புண்கள்,வீக்கம்,சிலந்தி கடி,பாம்பு கடி போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகின்றன.

   மேகமூட்டமான நாட்களில் சூரியகாந்தி பூக்கள் ஒன்றையொன்று பார்த்தபடி இருக்கும் என்ற ஒரு பொதுவான கட்டுக்கதை உள்ளது,ஆனால் இது அறிவியல் ரீதியாக தவறானது.
சூரியகாந்தி பூக்கள் சூரிய ஒளி இருக்கும்போது அதனை பின் தொடரும், ஆனால் சூரிய ஒளி இல்லாத போது அவை அதனதன் இடத்திலேயே இருக்கும்.

 

சூரியகாந்தி விதை கிடைக்கும் இடம்

Sunflower Seeds in Tamil

  சூரியகாந்தி விதைகள் அதிக அளவில் கிடைக்குமிடம் ” உலகிலேயே சூரியகாந்தி உற்பத்தியில் உக்கிரேனும், ரஷ்யாவும் தான் முன்னணியில் உள்ளது.சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் உக்கிரேன் ஆண்டுக்கு சுமார் மூன்று புள்ளி ஏழு மில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி மூலம் வருமானம் பெறுகிறது”.

   உக்கிரேன் சூரியகாந்தி எண்ணெய்களின் முக்கிய இறக்குமதியாளர்கள் இன்னும் இந்தியாவும், சீனாவும் தான். பூவை குறிக்கும் பிளவர் என்ற வார்த்தையை பெயரிலேயே கொண்டுள்ள ஒரே பூ சூரியகாந்தி பூ (Sunflower)  மட்டும்தான்.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?