பேரிக்காய் | Pear fruit in Tamil

    பேரிக்காய் | Pear fruit in Tamil

பேரிக்காய் Pear fruit in Tamil (6)

பேரிக்காய் | Pear fruit in Tamil

பேரிக்காய் நன்மைகள்

  அதிக சத்து நிறைந்ததும் சுவையானதுமான பேரிக்காய் மலைப்பகுதிகளில் விளையக்கூடியது.

வைட்டமின் ஏ இதில் உள்ளது 

    பேரிக்காய் ஆப்பிள் வகையை சேர்ந்த, எனினும் ஆப்பிளில் இல்லாத வைட்டமின் ஏ இதில் உள்ளது

  ஆப்பில்பழத்தை விட இது விளைவு மலிவு என்றாலும் ஆப்பில் பழத்தினை விட பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படுத்துகிறது (Pear fruit in Tamil)

     பேரிக்காய்  அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்பு சத்து கிடைக்கும்.எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படும்.

    இதயம் வலுவாகும், இறப்பை, குடல் பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.

பசியைதுண்டுகிறது

    இதனை அடிக்கடி உண்ணும் பொழுது நல்ல பசியும் எடுக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

    வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும் ஆற்றலும் பேரிக்காய்க்கு உண்டு.

இருதய படபடப்பை குறைகிறது 

      திடீரென இருதயம் சிலருக்கு பட படக்கும், மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இத்தகைய பலவீனங்கள் நீங்கும், மன உறுதியும் மன தெம்பும் ஏற்படும்.

      சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று பேரிக்காய். அவர்கள் எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியாக இருக்கவும், நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்கிறது.

    கர்ப்பிணி பெண்கள் பேரிக்காயை சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நன்கு திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
    பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த பேரிக்காயை சாப்பிட்டு வந்தால் நன்று பால் சுரக்கும்.

புற்றுநோய் மற்றும் இதய நோயினை கட்டுப்படுத்துகிறது


   பேரிக்காய் தோலில் உள்ள அதிக அளவு தாவர ஊட்டச்சத்துக்கள், புற்றுநோய் மற்றும் இதய நோயினை கட்டுப்படுத்துகின்றன.

    பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதோடு புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைகிறது 

பேரிக்காய் Pear fruit in Tamil (2)

   குறைந்த கலோரிகளைக் கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது.இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது.

    இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதயம் பலவீனமாக உள்ளவர்களும் அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு நீங்கும்.

   வளரும் குழந்தைகளுக்கு கால்சியம், இரும்பு சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் அதிகம் நிறைந்துள்ளது.

    சிலருக்கு வயிற்றில் மற்றும் வாயில் புண் இருக்கும்,தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் போதும் புண்கள் விரைவில் குணமடையும்.

சிறுநீரக கல்லை வெளியேற்றுகிறதது

       இரத்தத்திலிருந்து பிரிந்த தாது உப்புகள் அனைத்தும் சிறுநீரகத்தில் படிந்து அது கல்லாக மாறுகிறது.
    இந்த சிறுநீரக கல்லை உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் போதுமானது, விரைவில் குணமடையும்.மேலும் சிறுநீரக புற்றுநோயை தடுக்க பேரிக்காய் சிறப்பானது.

    இது உடல் சூட்டையும் தணிக்கிறது.நரம்பு புத்துணர்வு அடைய இது உதவுகிறது.
தோல்களில் ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் பேரிக்காய் குணப்படுத்துகிறது.


  டைப் 2 சர்க்கரை நோயை தடுகிறது 

பேரிக்காய் Pear fruit in Tamil (3)

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பினை இது குறைக்கிறது.

பேரிக்காய் ஒரு சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும்.கிடைக்கும் காலங்களில் இரவு உணவிற்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க :

பேரிக்காய் ஜூஸ் பேரிக்காய் Pear fruit in Tamil (4)

செய்முறை

  • பேரிக்காய் ஏழைகளின் ஆப்பிள் அப்படின்னு சொல்லுவாங்க.

  • இப்பொழுது ஜூஸ் செய்வதற்காக மூணு பேரிக்காய் எடுத்து கொள்ளவும்.

  • சின்ன துண்டு இஞ்சி,

  • பாதி எலுமிச்சை பழம்,

  • கால் டீஸ்பூன் உப்பு,

  • தேவையான அளவுக்கு சர்க்கரை எடுத்துக்கொள்ளவும் .

  • தேவையான அளவுக்கு தணிர் எடுதுக்கவும் .


   பேரிக்காய் மேல் தோலை எடுத்துட்டு  சின்ன சின்னதா வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்பொழுது இது ஒரு மிக்ஸி ஜாரில் சிறு துண்டாக வெட்டி வைத்துள்ள பேரிக்காய் அதனுடன் ஒரு சின்ன துண்டு இஞ்சி மற்றும் பாதி எலுமிச்சை சாறு,சிறிதளவு தூள் உப்பு  தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும் பின்  வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது சுவையான பேரிக்காய் ஜூஸ் தயார்.


பேரிக்காய் மில்க்ஷேக் எப்படி செய்வது?

பேரிக்காய் | Pear fruit in Tamil (5)

மூன்று பேரிக்காய் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

தேவையான அளவு சர்க்கரை,

5 பாதாம்,

300 மில்லி பால்,

  இந்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.தேவை என்றாள் ஐஸ் கட்டிகளை சேர்த்துகொள்ளவும்.இப்பொழுது சுவையான பேரிக்காய் மில்க்ஷேக் தயார்

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?