பருத்தி பால் நன்மைகள்|Paruthi Paal benefits in Tamil

Paruthi Paal benefits in Tamil

    பண்டைய காலத்தில் இருந்தே பழக்கப்பட்ட ஒரு பாணத்தில் பருத்திப்பாளும் ஓன்று.

Paruthi Paal benefits in Tamil (1)

மேலும் படிக்க ; Omega 3 rich foods in Tamil  

பருத்திப்பால் செய்முறை

பருத்திப்பால் (Cotton milk)செய்யறதுக்காக பருத்திக்கலை பறித்து பருத்திக் கொட்டைகளை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளலம்.

     ஒரு அரை கிலோ பருத்திக்கொட்டைகளை எடுத்துக்கொள்ளவும். பருத்தி கொட்டைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

   பருத்தி கொட்டையை சுமார் மூன்று மணி நேரம் நன்றாக ஊறவைத்துகொள்ளவும்.

   பருத்திக்கொட்டைகள் நன்றாக உறினாள் மட்டும்தான் ஆட்டுவதற்கு எளிமையாக இருக்கும். பருத்திக்கொட்டையில் இருந்து பாலை தனியாக பிரித்து எடுக்க முடியும்.

   இப்பொழுது பருத்தி பாலுக்கு தேவையான பொருட்களை பற்றி பார்ப்போம்.

  • 25 கிராம் சுக்கு
  • 15 ஏலக்காய்
  • 1.5 கிலோ நாட்டு சக்கரை
  • 20 கிராம் மிளகு

   இப்பொழுது பருத்திக்கொட்டையை உரலில் சேர்த்து நன்றாக ஆட்டி கொள்ளவும். பருத்திக்கொட்டைகளை நன்றாக ஆட்டிய பிறகு பருத்திக்கொட்டையில் இருக்கும் பால் தனியாக  இப்பொழுது பிழிந்து எடுத்துக் கொள்ளலாம்.

   ஆட்டி வைத்திருந்த பருத்தி  பால் தனியாக பிரித்து எடுத்து கொண்ட பிறகு பருத்திப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்யவும்.

  அதில் அடுத்து நாம் எடுத்து வத்திருந்த சுக்கினை அம்மியில்  வைத்து நன்றாக நுணுக்கி எடுத்துக்கொள்ளவும்.

    இதில் மிளகு மற்றும் ஏலக்காய் இரண்டையும் சேர்த்து  நன்றாக  அரைத்து கொள்ளவும்.

     பருத்திப்பால் பொங்க ஆரம்பித்த பின்பு  நாம் எடுத்து வைத்துள்ள நாட்டு சர்க்கரையை பருத்திப்பால் உடன் சேர்த்துக் கொள்ளவும்.

    இப்பொழுது நாம் நுணுக்கி வைத்திருந்த சுக்கு மற்றும் ஏலக்காயினை பருத்திப்பால் உடன் சேர்த்துக் கொள்ளவும்.

    சிலர் இந்த பருத்தி பாலில் அரிசி மாவினை கரைத்து சேர்த்துக் கொள்வார்கள்.தேவை என்றல் சேர்த்துக்கொள்ளவும்.

    பிறகு பருத்தி பாலில் இருக்கின்ற பச்சை வாசனை போன பின்பு சாப்பிட தயாராகி விடுகிறது.உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பருத்தி பாலினை அனைவரும் செய்துசாப்பிடவும்.

நன்மைகள்

   நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக கருதினர்.

நோய் எதிர்ப்பு சக்தி

   அன்றைய காலத்தில் அவர்கள் தேநீருக்கு பதிலாக அருந்தியது பருத்தி பாலை தான். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் அதிகமாக உள்ளது.

சளி மற்றும் இருமல்

Paruthi Paal benefits in Tamil (2)

   இதில் தேங்காய் பால், பருத்தி பால், பச்சரிசி மற்றும் கருப்பட்டி, பாதாம் உள்ளிட்ட பொருட்களின் மகிமையும் இதில் உள்ளது.

  கருப்பட்டி சேர்க்கப்படுவதால் சளி மற்றும் இருமல் தொல்லையை குணப்படுத்துகிறது. மேலும் கால்சியம் சத்தும் இதில் அதிகமாக உள்ளது.

   இதனைத் தொடர்ந்து உட்கொண்டு வரும் பொழுது உடல் வலுவையும் அதிகரிக்கிறது.

வயிற்று புண்கள்

Paruthi Paal benefits in Tamil (3)

   பருத்திக்கொட்டை ஆனது வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றக்கூடிய வல்லமை பெற்றது.

இதய பலம்

     இது இதயத்தினை பலப்படுத்துகின்றது. மேலும் இது வயிறு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்துவதனால் கணையம் சுரக்கக்கூடிய இன்சுலினில் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை

இன்சுலின் எதிலிருந்து எடுக்கப்பட்டது

Paruthi Paal benefits in Tamil (4)

    விஞ்ஞானம் வளர்ந்து வந்த காலத்தில் இன்சுலின் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்றால் மாடுகளில் இருந்து தான்.

     ஏனென்றால் மாடுகளின் பிரதான உணவான பருத்திக்கொட்டை மாடுகளுக்கு கொடுத்து வந்தபோது மாடுகளின் கணையம் சீராக இருந்தது. அதனால் தான் மாடுகளுடைய கணையத்திலிருந்து இன்சுலின் எடுத்தனர்

   இந்த இன்சுலினை எடுத்து மனிதனுக்கு செயல்முறைப்படுத்தினர். அதன் பிறகு தான் ஹியூமன் இன்சுலின் என்று சொல்லக்கூடிய ஹார்மோன் கண்டுபிடிக்கப்பட்டது.

கணயத்தை சீறக்குகிறது

Paruthi Paal benefits in Tamil (5)

   இந்தப் பருத்திக் கொட்டையிலான பருத்திப் பாலை நாம் பழக்கத்திற்கு கொண்டு வந்தால் நம் கணயமும் சீராக இயங்கும்.

    இந்தப் பருத்தி பாலை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்து வரும் பொழுது உடலுக்கு தேவையான ஆற்றலும் வலுவும் கிடைக்கின்றது.

   பருத்தி பாலில் உடலுக்கு தேவையான வைட்டமின்,புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளது.

மலமிளகியாக செயல்படுகிறது

  பருத்திப்பால் ஆனது சிறந்த மலமிளகியாக செயல்படுகிறது.

    ஒரு சிலருக்கு பார்த்தால் மாட்டுப்பால்குடிப்பதனால் அலர்ஜி பிரச்சனைகள் உள்ளவர்கள். பருத்திப்பால் தாராளமாக குடித்து வரலாம்.

இரத்த அழுத்தம்

   இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த பருத்திப்பால் குடித்து வரும்பொழுது இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது மேலும் இதயத்தினை ஆரோக்கியமாக வைக்கின்றது.

உணவுப் பாதை புண்கள் குணமடைகிறது

  அல்சர் உள்ளவர்கள் மற்றும் உணவுப் பாதையில் புண்கள் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த பருத்திப்பால் இணை குடித்து வரும் பொழுது வயிற்றில் இருக்கின்ற புண்கள் அனைத்தும் குணமாகும்.

  பருத்திப்பால் வாரத்தில் ஒரு முறையாவது குடித்து வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மூட்டு வலி, முதுகு வலி

Paruthi Paal benefits in Tamil (6)

   கை ,கால், மூட்டு வலி உள்ளவர்கள் கோதுமை நன்றாக வறுத்து எடுத்து அதை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பவுடரை பருத்திப்பால் உடன் கலந்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வருவதனால் கை கால் மற்றும் மூட்டு வலி முதுகு வலி போன்ற பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

   இந்தப் பருத்திப்பால் ஆனது வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கின்றது. இதனால் கணையத்தில் சுரக்கக்கூடிய இன்சுலின் பிரச்சனையை தடுக்கின்றது.

பருத்திப்பால் கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?

    பருத்திப்பால் ஆனது உடலுக்கு அதிக அளவு வெப்பத்தினை ஏற்படுத்தும் காரணத்தால் கர்ப்பிணி பெண்கள் இந்த பருத்திப் பாலை தவிர்ப்பது நல்லது.

 

பருத்திப்பால் அல்வா செய்முறை

Paruthi Paal benefits in Tamil (7)

 

     தேவையான பொருட்கள்;

  • பருத்தி விதை 300 கிராம்
  • தேங்காய் பால் 300ml
  • பசும்பால் 300m
  • l நெய் 100ml
  • பிரவுன் சுகர் 200 கிராம்

     எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    பருத்தி விதையை நன்றாக இரண்டு மூன்று தடவை நன்றாக கழுவி அதனை ஒரு ஆறு மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.

    பிறகு அதில் உள்ள நீரினை வடிகட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 200 எம்எல் பருத்திப்பால் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

     நன்றாக கொதித்த பிறகு அதில் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது இதில் காயவைத்து ஆற வைத்த பசும்பாலினை சேர்த்துக் கொள்ளவும். பசும்பால் கிடைக்கவில்லை என்றால் பாக்கெட் பால் சேர்த்து கொள்ளவும்.

    கெட்டியானதும் நாம் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.

   நன்றாக கெட்டியானதும் இதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

    பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் பதத்தில் இதனை எடுக்க வேண்டும். இதனை அப்படியே மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிதளவு காஷ்மீர் தூவி விடவும்.

     இப்பொழுது சுவையான பருத்திப்பால் அல்வா தயார்.

 

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?