பனங்கிழங்கு | Panang Kilangu benefits in Tamil

பனங்கிழங்கு | Panang Kilangu benefits in Tamil

Panang Kilangu benefits in Tamil

   பனங்கிழங்கு (Palmyra Sprout) என்பது பனைமரத்தில் இருக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு.

Panang Kilangu benefits in Tamil (1)

பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டு விட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்தால் அதிலிருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.

     பனங்கிழங்கில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கின்றது. இந்த பனங்கிழங்கினை அடிக்கடி சாப்பிட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றது.அது என்னென்ன என்று பார்க்கலாம்.

நன்மைகள்

 இரும்புச்சத்து

  பனங்கிழங்கில் இரும்புச் சத்தானது அதிகமாகவே உள்ளது.

   பனங்கிழங்கினை வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து அதனை நன்றாக காய வைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

  பனங்கிழங்கில் பாதாம் போன்ற உயர் சத்துக்கள் அதிகமாக உள்ளது, இதனால் தான் பணக்காரனுக்கு பாதாம் பசித்தவனுக்கு பனங்கிழங்கு என்று பழமொழி கூட உள்ளது.

  பனங்கிழங்கினை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகவே கிடைக்கின்றது.

உடல் எடைPanang Kilangu benefits in Tamil (2)

   உடல் எடை அதிகரிக்க பனங்கிழங்கினை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வரலாம்.

   இதில் மாவு சத்து அதிகமாக உள்ளது. அதனால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் மெலிந்தவர்களுக்கு கூட உடல் எடை அதிகரிக்கும்.

  உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இதனை அளவோடு சாப்பிடுவது நல்லது.

  பனங்கிழங்கு அதிகமான குளிர்ச்சி தன்மையுடையது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் இந்த பனங்கிழங்கினை சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு குளிர்ச்சி அளிக்கும், குளிர்ச்சியான உடலுடையவர்கள் பனங்கிழங்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது.

இன்சுலின்

  சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை உண்ணக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதிப்பொருட்கள் நம் உடலில் இன்சுலினை சுரக்க வைக்கின்றது.

  இது இரத்தத்தின் சர்க்கரை அளவினை கட்டு ப்படுத்துகிறது.

  பனங்கிழங்கு இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிப்பதால் இது நீரழிவு நோய்களுக்கு எந்த வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. இதனை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

கருப்பை 

Panang Kilangu benefits in Tamil (3)

  அடுத்ததாக பெண்களின் கருப்பை பலம் பெறுவதற்கு பனங்கிழங்கு மிகவும் உதவியாக உள்ளது.

  பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும்.

  இது பெண்களின் கர்ப்ப பைக்கு பலம் அளிக்கக் கூடியதாக உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வாயு பிரச்சனை

  பனங்கிழங்கு அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம்.

  பனங்கிழங்கு வாயு தொல்லையை உடையது.வாயு பிரச்சனையை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு மற்றும் மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம்.

  இனிப்பு தேவை என்பவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம், அப்படி இல்லை என்றால், ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் அளவு பனங்கிழங்கு மாவினை கலந்து இதில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம்.

  அப்படியும் இல்லை என்றால் வெறும் பூண்டு ,மிளகு , பனங்கிழங்கு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

 தலைவலி

    பூமியிலிருந்து பனங்கிழங்கு பிரித்து எடுக்கும் பொழுது அந்த விதையிலிருந்து தவறி கிடைக்கும் அந் தவனை சாப்பிட்டால் வயிற்று வலி ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் அனைத்தும் மொத்தமாக சரியாகிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி

    பனங்கிழங்கு நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இதை சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை தொடர்ச்சியாக சாப்பிடுவது நல்லது.

இரத்த சோகை

   பனங்கிழங்கினை வேகவைத்து சிறு சிறு துண்டாக வெட்டி அதனை காய வைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைகிறது.

  பனங்கிழங்கில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளதால், இது இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு  வரலாம்.

  தொடர்ந்து பனங்கிழங்கினை உணவில் சேர்த்துக் கொண்டே வருவதால் இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

மலச்சிக்கல்

   மலச்சிக்கல் அடிக்கடி ஏற்படுகிறது என்று சொல்கின்றவர்களுக்கு பனங்கிழங்கு சரியான தீர்வாக உள்ளது.

  மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கினை வேகவைத்து எடுத்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொரியல் மாதிரி செய்து சாப்பிட்டு வருவதனால் உடனடியாக தீர்வு கிடைக்கும். இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே சரி செய்கிறது.

பித்தம்

 

   பனங்கிழங்கு சாப்பிடும் பொழுது பித்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு பனங்கிழங்கினை சமைக்கும் பொழுது அதில் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

  அப்படி இல்லை என்றாள் பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே தான் உள்ளது. இதனால் பனங்கிழங்கு சாப்பிட்ட பிறகு ஐந்து மிளகு எடுத்து வாயில் போட்டு சாப்பிடலாம். மற்றபடி பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைக்கின்றது மற்றும் ஆரோக்கியமும் கிடைக்கின்றது.

எலும்பு முறிவு,தசை சுருக்கம்

    பனங்கிழங்கு எலும்புகளுக்கு பலம் அளிக்க கூடியதாக உள்ளது.பனங்கிழங்கில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால், பனங்கிழங்கு தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதனால் பித்தம், எலும்பு முறிவு,தசை சுருக்கம், எலும்புகளின் அரிப்பு இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். இது எலும்புகளுக்கு பலத்தை அளிக்கிறது.

  இரத்த கொழுப்பு கட்டி 

    இரத்த கொழுப்பு கட்டிகள் உருவாவதை தடுக்கின்றது. இது உடம்பில் ஏற்படுகின்ற இரத்த கொழுப்பு கட்டிகளை கரைக்க பனங்கிழங்கு மிகவும் உதவியாக உள்ளது.

இருதய நோய் 

  இதனைத் தொடர்ந்து பனங்கிழங்கினை சாப்பிடுவதால் இருதய நோய் வராமலும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஆண்மை தன்மை

  இது ஆண்களுடைய ஆண்மை தன்மையை அதிகரிக்க பனங்கிழங்கு மிகவும் உதவியாக உள்ளது. இது நாட்டு மருத்துவத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

காய்ச்சல், இருமல் (Pan

  இது குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் வராமல் தடுக்க இந்த பனங்கிழங்கு மாவு மிகவும் உதவியாக உள்ளது.

  பனங்கிழங்கு மாவினை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வரும் பொழுது குழந்தைகளுக்கு மலச்சிக்கல்,சளி, இருமல் இது மாதிரியான பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது.

மேலும் படிக்க;நிலாவரை | Nilavarai powder benefits in Tamil

பனங்கிழங்கு மாவு

 

பனங்கிழங்கு சுடுதண்ணியில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு உப்பு சேர்த்து மஞ்சள் நிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.

இதில் இருக்கும் நாறு மற்றும் நடுப்பகுதியில் இருக்கும் குருத்தினை நீக்கி விடவும்.

பிறகு இதனை வெயிலில் மூன்று நாட்கள் நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.

நன்றாக காய்ந்த பிறகு 15 மிளகு, சிறிய துண்டு சுக்கு, 6 ஏலக்காய், 1/2கிலோ அளவிற்கு காய்ந்த பனங்கிழங்கு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

நன்றாக அரைத்துப் பிறகு இதனை சலித்துக் கொள்ளவும். இப்பொழுது மணமான பனங்கிழங்கு மாவு தயார்.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?