நார்த்தங்காய்|Narthangai benefits in Tamil

  நார்த்தங்காய்

narthangai benefits in tamil

Narthangai benefits in Tamil

   நார்த்தங்காய் தோற்றத்தில் சாத்துக்குடி போல இருந்தாலும், புளிப்புச் சுவையை அதிகம் கொண்டது.
  நன்கு பழுத்த நார்த்தங்காயில் புளிப்பு சுவை அதிகம் இருக்காது.

நன்மைகள்

பசியை தூண்டுகிறது

   நார்த்தங்காய் நோய் வராமல் தடுக்கிறது.பசியை தூண்டக் கூடியதாக விளங்குகிறது.வயிற்று வலியை போக்கக்கூடியது.

உடல் சூடு

narthangai benefits in tamil (1)

  நார்த்தம் பழம் ஒன்றை தினம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும், உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

  இப்ப பழ சாற்றை மதிய வேலையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

   நம்முடைய முன்னோர்கள் கூல் பழைய சாதம் ஆகியவற்றை சாப்பிட நார்த்தங்காய் ஊறுகாயினை பயன்படுத்தி வந்தார்கள்.

   நார்த்தங்காய் ஊறுகாய் பசியை தூண்டி உடல்நலத்தை பாதுகாக்கின்றது.

வாயு பிரச்சனை

   வயிற்றில் வாயு பிரச்சனை ஏற்படும் நிலையில், ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்று உண்டால் வாயு கோளாறு விரைவில் நீங்கிவிடும்.

வயிற்றுப் புண்

  நார்த்தங்காய் ஊறுகாய் வயிற்றுப் புண்ணுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.

  நார்த்தங்காய் அல்லது பழத்தை எந்த வடிவத்தில் ஆவது உணவில் சேர்த்துக் கொண்டு வர இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

  வாதம், வயிற்றுப்புண், வயிற்றுப்புழு நீங்கும். பசியை தூண்டி செரிமானத்தை சீராக்குகிறது.

சீதபேதி

   நார்த்தங்காய் மேல் தோலினை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊறவைத்து, நன்கு ஊறிய பின் சீதபேதி உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன்தருகிறது.

 

சுகப்பிரசவம்

   நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு நன்றாக கலந்து கர்ப்பிணி பெண்கள் காலையும், மாலையும் அருந்தி வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.

   நார்த்தம் பழச்சாற்றை தண்ணீரில் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

   தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தங்காய் சாற்றை கலந்து   குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குணமடைகிறது.

  இதிலுள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது.

   நார்த்தங்காய் சாறு குடிப்பதன் மூலம் பிரசவ கால வசதிக்கும், மஞ்சள் காமாலை இருந்து மீண்டவர்களுக்கும்,கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கும் நன்மை கிடைகிறது.

  இது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

சருமம் மாசு, மருவு

   நார்த்தங்காய்க்கு சரும அழகை காக்கும் தன்மையும் உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தங்காய் சாற்றினை கலந்து குடித்து வர சருமம் மாசு மருவு இன்றி பளபளப்பாக இருக்கும்.

பொடுகு

narthangai benefits in tamil (2)

   நார்த்தங்காய் சாற்றை தலையில் தடவி குளிப்பது மூலம் பொடுகினை நீக்க முடியும்.
   அதிகப்படியான எண்ணெய் பிசுக்கையும் போக்க முடியும்.

உடல் பருமன்

  வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை  பழச்சாற்றையும், தேனையும் கலந்து குடித்தால் எடை குறையும் என்பதை போலவே. நார்த்தங்காய் சாற்றினை குடித்து வருவதனால் உடல் பருமனை குறைக்கும் தன்மை நார்த்தங்காய்க்கு உண்டு.

தலைவலி

narthangai benefits in tamil (3)

  நார்த்தங்காய் சாறு காரணமே இல்லாமல் திடீரென வருகின்ற தலைவலிக்கு உடனடி நிவாரணம் தருகிறது.

   சில துளிகள் நார்த்தம் பழச்சாற்றை தேனில் கலந்து குடிக்கும் பொழுது வைட்டமின் சி மிகுதியாக உள்ள காரணத்தினால் ஜலதோஷம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளை சரி செய்கிறது.

புற்று நோய்

  நார்த்தங்காயில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால் புற்று நோய்க்கு எதிராக போராடும் சக்தியும் அதற்கு உண்டு.

வாய் துர்நாற்றம்

narthangai benefits in tamil (4)

  நார்த்தங்காயின் தோலை நீக்கிவிட்டு சுளைகளை மென்று உண்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

  நார்த்தங்காய் தோலுக்கு கடுமையான மனம் உண்டு. அந்த மனம் கொசு மற்றும் சின்ன சின்ன பூச்சிகளை விரட்டக்கூடியது.

  கொசு கடித்த இடங்களில் மீது நார்த்தம் பழச்சாற்றை விட்டு தேய்த்து வர அரிப்பினை குணமடைய செய்கிறது.

  இரத்த காயங்களின் மேல் நார்த்தங்காய் சாறை விட்டால் இரத்தம் வெளியேறுவது உடனடியாக நிற்கும்.

   நார்த்தங்காய் வயிற்றுப்புழு,வயிற்றுப் புண்ணை போக்கும்.

மஞ்சள் காமாலை

  இது மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் உதவுகிறது.இரத்தம் சுத்தமடையும்.

  நார்த்தங்காய் சாற்றினை குடித்து வருவதனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய் கசப்பு,குமட்டல், வாந்தி நிற்கும்.

 நார்த்தம் பழச்சாற்றில் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

  நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வர இரத்தம் தூய்மை அடைகிறது.

நார்த்தங்காய் ஊறுகாய் 

narthangai benefits in tamil (5)

தேவையான பொருட்கள்

 • நார்த்தங்காய் 3
 • தேவையான அளவு உப்பு
 • நல்லெண்ணை கால் லிட்டர்
 •  ஒரு ஸ்பூன் கடுகு
 • ஒரு ஸ்பூன் வெந்தையம்
 • காரப்பொடி
 • பெருங்காய துள்

செய்முறை

   நார்த்தங்காய் எடுத்துக் கொள்ளவும் அதில் உள்ள விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதன் தோல் தடிமனாக இருப்பதனால் உப்பு கலந்து 12 நாள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

   இதனை ஊற வைப்பதற்கு சில்வர் பாத்திரத்தினை தவிர்த்து நல்லது.மண்சட்டி அல்லது பிளாஸ்டிக் போன்றவைகளை உபயோகப்படுத்தவும்.

  இதில் உப்பினை கலந்து வைப்பதனால் சில்வர் பாத்திரத்தினை உப்பு அறித்து விடும்.

  12 நாட்கள் ஆன பின்பு நார்த்தங்காய் நிறத்தில் மாற்றம் இருக்கும். மேலும் நார்த்தங்காய் துண்டுகளை எடுத்தால் மென்மையாக இருக்கும்.

  இந்த நார்த்தங்காய் எப்படி தாளிப்பது என்று பார்ப்போம்.

   ஒரு ஸ்பூன் கடுகு,ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பவுடர் செய்து வைத்துக் கொள்ளவும்.

   இப்பொழுது கடாயில் நல்லெண்ணை கால் லிட்டர் ஊற்றிக் கொள்ளவும்.

  என்னை நன்றாக காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் கடுகு போட்டுட்டு கடுகு வெடித்ததும் அடுப்பினை அணைத்து விட்டு காரப்பொடி சேர்த்துக் கொள்ளவும்.

  பிறகு இந்த நார்த்தங்காய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும். இரண்டு நிமிடம் கழித்து இதில் கடுகு மற்றும் வெந்தய பொடியை சேர்த்துக் கொள்ளவும்.

   இறக்குவதற்கு முன்பு பெருங்காய பொடியை சேர்த்து நன்கு கிளறி பிறகு இறக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான  நார்த்தங்காய் உறுகாய் தயார்.

 நார்த்தங்காய் ஜூஸ் 

narthangai benefits in tamil (6)

தேவையான பொருட்கள்

 • நார்த்தங்காய் 4
 • இரண்டு டேபிள் ஸ்பூன் சுகர்
 • இரண்டு டேபிள் ஸ்பூன் நன்னரிசர்பத்
 • ஐஸ் தண்ணீர்

செய்முறை

  முதலில் 4 நார்த்தங்காய் எடுத்துக் கொள்ளவும். இதனை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  பிறகு இதனை எலுமிச்சை பல சாறு பிழிவது போல் பிழிந்து கொள்ளவும்.

  நார்த்தங்காயில் உள்ள விதைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு பிழிந்த சாரினை மிச்சியில் சேர்த்துக் கொள்ளவும்.

  அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, இரண்டு டேபிள் ஸ்பூன் நன்னாரி சர்பத், மூன்று டம்ளர் ஐஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

      இப்பொழுது ஆரோக்கியமான நார்த்தங்காய் ஜூஸ் தயார்.

மேலும்படிக்க; Indhu Uppu benefits in Tamil

நார்த்தங்காய் ஜூஸ் பயன்கள்

     எலும்பு மற்றும் மூட்டு வலி பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஜூஸினை உட்கொண்டால் இப்பிரச்சனைகள் விரைவில் குணமடையும்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த ஜூஸ் நல்ல பலனை கொடுக்கின்றது.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?