முளைகட்டிய பச்சை பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்|Mulaikattiya Pachai Payaru benefits in Tamil

mulaikattiya pachai payaru benefits in tamil

முளைகட்டிய பச்சை பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்|Mulaikattiya Pachai Payaru benefits in Tamil உண்மையில் முளைவிட்ட தானியங்கள் நமக்கு கிடைத்த ஒரு வரம் என்று சொல்ல வேண்டும்.

mulaikattiya pachai payaru benefits in tamil /mulaikattiya pachai payaru in english

Barley rice Benefits in Tamil

ஒரு தானியத்தை முளைக்கட்டும் பொழுது அதில் உள்ள விட்டமின் சத்துகள் முளைவிடும் பொழுது பன்மடங்கு ஆகிறது.

  இதை நாம் சாப்பிடும் பொழுது உடலுக்குத் தேவையான சக்திகள் மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் கிடைக்கும்.

சாதாரண தானியங்களில் உள்ளதை விட 20 மடங்கு அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கும்.

  • பச்சை பயிரை எப்படி முளை கட்டுவது
  • இதை சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்.
  • இதை எந்த நேரத்தில் சாப்பிடலாம்.
  • இதையாரெல்லாம் சாப்பிடக்கூடாது.
  • இதனால் ஏதாவது தீமைகள் உண்டா.
  • எப்படி சாப்பிடவேண்டும்.

       இப்படி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமா?.

பச்சை பயிரை எப்படி முளை கட்டுவது

mulaikattiya pachai payaru benefits in tamil /how to make mulaikattiya pachai payaru

 

இப்பொழுது பச்சை பயிரை எப்படி முளை கட்ட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

  •  முதலில் முழு பச்சைப் பயிரை நன்றாக சுத்தம் செய்து ஒரு நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
  •    பிறகு நன்கு ஊறிய பயிரை வடித்து விட்டு ஒரு காட்டன் துணியில் கட்டி தனியாக வைத்து விட வேண்டும்.
  • அடுத்த 12 மணி நேரத்திற்குள் அந்த ஊறிய பயிர் முளைகட்ட ஆரம்பித்து விடும்.
  • இதை பச்சையாகவே சாப்பிடலாம், சுவையாக இருக்கும்.

இதை எந்த நேரத்தில் சாப்பிடலாம்

     இதை எப்பொழுது சாப்பிடலாம் என்று கேட்டால் காலை நேரத்தில் சாப்பிடலாம்.

    இது சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் மற்ற உணவுகளையோ அல்லது காப்பி சாப்பிட வேண்டும்.

  அதேபோன்று மாலை நேரத்தில் சாலட் போன்று சாப்பிட்டு வரலாம்.

முளைகட்டிய பயிரின் நன்மைகள்

அதிகமான ஊட்டச்சத்துக்கள்

    இந்த முளைகட்டிய பயிரில் சாதாரண பயன்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம். குறிப்பாக விட்டமின் மற்றும் பி ,காம்ப்ளக்ஸ் ,விட்டமின் சி ,விட்டமின் ஈ மற்றும் விட்டமின் ஏ போன்றவை உள்ளன.

முக்கியமாக இதில் புரதச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும் நியாஸ் இன் தயமின் போன்ற சத்துகளுடன் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவு உள்ளன.

அதேபோன்று இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு சத்து, துத்தநாகம் போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன.

நோய்வராமல் தடுக்கிறது

  முக்கியமாக இது நோய்களை தீர்ப்பது மட்டுமல்லாமல், எந்த வித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

உயிர்சத்து மிக அதிகம்

  முக்கியமாக இதுபோன்று முளைக்கட்டிய பயிரில் இருந்து விட்டமின் சி என்ற உயிர்சத்து மிக அதிக அளவில் பெற முடியும்.

  சொல்லப்போனால் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை விட அதிக அளவில் உயிர்சத்து மிக அதிக, தாதுக்கள், அமினோ அமிலங்கள் இப்படி முளைக்கட்டும்போது அதிகரிக்கின்றன.

  உண்மையில் முளைவிட்ட தானியங்கள் ஒரு முழுமையான உணவு என்று சொல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து

mulaikattiya pachai payaru benefits in tamil (3)

  இந்த முளைகட்டிய பச்சைப்பயிரில் அதிக புரதச்சத்து இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும்.

உடல் பொலிவாகும்

  முளைகட்டிய பச்சை பயிரில் உள்ள சத்துக்களால் உடல் பொலிவாகும்,எலும்புகள் வளர்ச்சி பெறும், குழந்தைகளின் அறிவு வளர்ச்சி அதிகரிக்கும் .

  பொதுவா உடல் பலம் இழந்து சோர்வாக இருப்பவர்கள் முலைவிட்ட பயிரை சாப்பிட்டால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

  அதே போன்று இந்த முளைகட்டிய பச்சைப்பயிறு அரைத்து அதில் வெள்ளம், தேன், தேங்காய் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

  முக்கியமாக இளைஞர்கள், உடல் வலிமைக்காக உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவு இது.

எடை குறைக்கிறது

mulaikattiya pachai payaru benefits in tamil (4)

  இந்த முளைக்கட்டிய பச்சை பயிர் குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டது. காரணம் பயிறு முலைவிட்ட பிறகு இதில் மாவு சத்து குறையும். எனவே எடை குறைக்க நினைப்பவர்களும் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

  இன்னும் சொல்லப்போனால் உடல் எடை குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது.

கொழுப்புகளை வெளியேற்றுகிறது

  உடலில் உள்ள தேவையற்ற நச்சு பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் இந்த முளைகட்டி தானியங்கள் உதவுகிறது.

இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது(

mulaikattiya pachai payaru benefits in tamil (5)

  அதேபோன்று இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.மேலும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தருகிறது.

  இவற்றில் அதிக அளவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் உடலில் உள்ள சுரப்பிகளை சீராக செயல்பட வைக்கிறது.

இரத்த சோகை(

  அதே போன்று இதில் இரும்பு சத்து மற்றும் இரும்பு சத்தை உறிஞ்ச உதவும் விட்டமின் சி யும் உள்ளதால் இரத்தசோகை உள்ளவர்கள் இதை தொடர்ந்து எடுத்து வந்தால் விரைவில் இரத்த சோகை நீங்கும்.

  அதே போன்று உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முளைகட்டிய பயிரை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைய இதில் உள்ள பெப்டைடுகள் உதவி செய்கிறது.

  விதைகள் முளைக்கும் பொழுது இந்த பெப்டைடுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது

   இதில் உள்ள பொட்டாசியம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

  முக்கியமாக இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது.

  அதேபோன்று இது (ட்ரைன் கிளிசரைகள்) எனப்படும் மற்றொரு இரத்த கொழுப்பை குறைக்க உதவுகிறது.எனவே ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் இந்த முளைக்கட்டி பெயர் மிக நல்லது.

செரிமானத்திற்கு உதவுகிறது

mulaikattiya pachai payaru benefits in tamil (6)

   இந்த முளைகட்டிய பச்சைப் பயிரில் கரையாத நார்சத்துகள் வளமாக உள்ளதால் இது செரிமானத்திற்கு உதவுகிறது.

   இதில் உள்ள அதிக நார் சத்து பெருங்குடலை சுத்தம் செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.உண்மையில் மலச்சிக்கலை தடுக்க உணவில் போதுமான அளவு கரையாத நார்சத்து இருப்பது அவசியம்.

பார்வை திறனை அதிகரிக்கிறது

mulaikattiya pachai payaru benefits in tamil (7)

   இந்த முளைகட்டிய பயிரில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் கண் பார்வை தொடர்பான குறைபாடு களை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

   இதில் உள்ள விட்டமின் ஏ சத்து கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வை திறனை மேம்படுத்து உதவுகிறது.

  அது போன்று இதை பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

  இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சன் சருமத்தை பாதுகாத்து பொலிவாக வைக்க உதவுகிறது.

புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது

   அடுத்து இந்த முளைகட்டிய பச்சைப் பயிரில் ஆக்ஸிஜனேற்றளவு முளைக்காத பயிரை விட அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.

   இதற்கு காரணமான பீனோலிக் கலவைகள் உடல் முழுவதும் பிரிரடிகல் செயல்பாட்டை குறைக்க உதவுகிறது.இதனால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது

   அதேபோன்று இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது.இதில் உள்ள அதிக நார்சத்து இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் வெளியீட்டை குறைத்து இரத்தசர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

  முளைகட்டிய பயிரை சாப்பிட்ட பிறகு உடலுக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும். காரணம் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

எப்படி சாப்பிடவேண்டும்

   அனைவருக்கும் ஒரு சந்தேகம் வரும். இதை பச்சையாக மட்டும் தான் சாப்பிடலாமா அல்லது அவித்து சாப்பிடலாமா என்று.

   பொதுவாக அசிடிட்டி உள்ளவர்கள், அல்சர், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் முளைகட்டிய தானியங்களை நிச்சயமாக வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்.

   பயிரை நன்றாக சுத்தம் செய்யாமல் முளை விடுவதற்கு தண்ணீரில் ஊற வைக்கும் பொழுது பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.
எனவே தானியங்களை நன்றாக சுத்தம் செய்து மற்றும் ஊற வைக்க சுத்தமான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.

முளைகட்டிய பயிரின் தீமைகள்

  அதேபோன்று சிலருக்கு பச்சை பயிரும் ஒவ்வாமை ஏற்படுத்தலாம்.

    பச்சை பயிர் ஒவ்வாமை உடையவர்களுக்கு மூச்சு திணறல், அரிப்பு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் இவர்கள் மட்டும் தவிர்ப்பது நல்லது.

 

    பச்சை பயிரை மட்டும் முளைகட்டி சாப்பிடாமல் வெந்தயம், கொள்ளு, கேழ்வரகு, உளுந்து என்று மற்ற தானியங்களையும் இதே போன்று முளைகட்டி சாப்பிட்டு வரலாம்.

இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உண்மையிலேயே உடலில் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை உணர முடியும் எனவே நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?