முளைக்கீரை பயன்கள் | Mulai Keerai benefits in Tamil

முளைக் கீரையின் நன்மைகள்

Mulai Keerai benefits in Tamil

100 கிராம் அளவுள்ள முளைக்கீரையில் நீர் சத்தானது 7.4% இருப்பதால் உடலினுடைய
   வெப்பத்தை தணிக்க கூடிய ஆற்றல் இந்த முளைக்கிறையில் உள்ளது.

Mulai Keerai benefits in Tamil

   இந்த முளைக்கிறையினை தயிறுடன் சேர்த்து உண்ணலாம். முளைக்கீரை உடலினை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க :   பருத்தி பால் நன்மைகள்

   முளைக்கிறையில் விட்டமின் ஈ ஆனது 4.2 மைக்ரோகிரம்(microgram) அளவு உள்ளதால் இது ஒரு அற்புத உணவு மருந்தாகும்.

வாய்ப்புண் மற்றும் அல்சர் 

Mulai Keerai benefits in Tamil

   வாயில் வரக்கூடிய அல்சர் அதாவது வாய்ப்புண் என்கின்ற பல் ஈறு வீக்கம் மற்றும் தொண்டைப்புண் ஆகியவற்றை ஆற்றும் வல்லமை இந்த முளைக்கீரை கொண்டுள்ளது.

ஜீரண சக்தி

   முளைக்கிறையானது உணவு ஜீரண மண்டலத்தை துரிதப்படுத்தி உணவை நன்கு ஜீரணிக்க செய்கிறது.
   இது வயிற்றுப் போக்கினை தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றுள்ளது.

   100 கிராம் அளவுள்ள முளைக்கீரையில் கால்சியம் 1. 59 மைக்ரோ கிராம் அளவு கொண்டுள்ளது.

எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது Mulai Keerai benefits in Tamil (1)

   இது எலும்புகளின் வளர்ச்சியை அதிகரித்து குழந்தைகள் உயரமாக வளர்வதற்கு உதவியாக உள்ளது.

குழந்தைகள் உயரமாக வளர

   வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து இந்த முளைக்கீரையினை கொடுத்து வர குழந்தைகள் உயரமாக வளர்வதை கண்கூடாக பார்க்க முடியும்.

தோல் நோய்

Mulai Keerai benefits in Tamil (2)

   முளைக்கீரை ஆனது எக்ஸிமா என்கின்ற தோல் நோயை குணப்படுத்துகின்றது.

  இந்த முளைக்கீரை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு அதிகம் பிற உணவுகளை சாப்பிட விடாமல் தடுத்து உடல் எடையை குறைக்க பயனுள்ளதாக இக்கீரையானது உள்ளது.

   100 கிராம் அளவுள்ள முளைக்கீரையில் வைட்டமின் ஏ ஆனது 710 முதல் 3120 மைக்ரோ கிராம் அளவு இருப்பதால் இது கண்களுடைய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

முடி அடர்த்தி

Mulai Keerai benefits in Tamil (3)

   முளைக்கீரையானது முடியினுடைய திக்னஸ் அதாவது முடியினுடைய பருமனை அதிகரிக்கிறது.

முடி கொட்டுதலை தடுத்து முடியினுடைய வளர்ச்சியை தூரிதப்படுத்தி நன்கு வளர செய்கிறது.

நச்சு கழிவுகள் 

  முளைக்கீரையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆனது உடலில் உள்ள நச்சு கழிவுகளை உடலை விட்டு வெளியேற்றுகின்றது.

  முளைக்கிறையானது உங்களை விரைவாக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது 

முளைக்கீரை பயன்கள் Mulai Keerai benefits in Tamil

  100 கிராம் முளைக்கீரையில் மெக்னீசியம் 248 மைக்ரோ கிராம் அளவு உள்ளது.
எனவே முளைக்கீரையை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது இதய இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது.

  முளைக்கிறையில் பிளட் பிரஷர் (blood pressure) அதாவது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

   முளைக்கீரை உடன் மஞ்சள் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வருவதனால் இருமலை சரி செய்கிறது.

 முளைக்கீரையுடன் மஞ்சள் ,சீரகம், மிளகு ,சிறிய வெங்காயம் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டு வருவதனால் பசியின்மையை போக்கி உணவை நன்கு சாப்பிட உதவுகிறது.

  முளைக்கீரை உடன் சீரகம் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது ஃபீவர் (fever) அதாவது காய்ச்சலில் இருந்து குணமடைய செய்கிறது.

முளைக் கீரையுடன் முந்திரி மஞ்சள் கலந்த கலவையாக முகத்தில் பூசி வருவதனால் பளபளப்பான குழுக்கள் இல்லாத மிருதுவான சருமத்தை அழகாக்கிறது.

  இந்த முளைக்கிறையை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

  சிறுநீர் உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.

   பித்தப்பை கற்கள் இருந்தால் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.

   கால் வலி மற்றும் கால் வீக்கம் உள்ளவர்கள் இக்கீரையை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

முளைக்கீரை பொரியல் செய்முறை முளைக்கீரை பயன்கள் Mulai Keerai benefits in Tamil (1)

   தேவையான பொருட்கள் 

 • முளைக்கீரை
 • பருப்பு
 • எண்ணெய்
 • கடுகு
 • உளுத்தம்பருப்பு
 • சீரகம்
 • பூண்டு
 • காய்ந்த மிளகாய்
 • தேங்காய்
 • தேவையான அளவு உப்பு

 

   சிறிதளவு சிறு பருப்பினை எடுத்துக்கொண்டு நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். அதனை நன்றாக கழுவி ஒரு சிறிய பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

  அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகும் வரை காத்திருக்கவும். நன்றாக வெந்த பிறகு இதனை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

  ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடு செய்து கொள்ளவும். என்னை சூடானதும் சிறிதளவு கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் சேர்த்துக்கொள்ளவும். பிறகு இதில் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

  இதனுடன் இரண்டு பூண்டு பற்கள் நன்றாக தட்டி சேர்த்துக் கொள்ளவும். இது நன்றாக வதங்கி வரும் பொழுது பூண்டும் மிளகாய் அனைத்தும் நன்றாக வறுபட்டு வந்ததும் அரை கட்டு முளைக்கீரையை குட்டி குட்டியாக வெட்டிக சேர்த்துக் கொள்ளவும்.

  எப்பொழுதும் அரைக்கிறையாக இருந்தாலும் சரி முளைக்கீரையாக இருந்தாலும் சரி பொறியியல் பண்ணும் பொழுது அதனுடைய தண்டோடு சேர்த்து நாம் வெட்டி சமைக்கலாம்.

  இப்பொழுது கீரை ஓரளவுக்கு வதங்கி வந்த பிறகு நாம் வேக வைத்திருந்த பருப்பையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

 இந்தக் கீரைக்குத் தேவையான அளவு உப்பினை சேர்த்துக் கொள்ளவும்.

  அனைத்தையும் சேர்த்த பிறகு இரண்டு அல்லது மூன்று நிமிடம் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும் கீரை நன்றாக வெந்ததும் சிறிதளவு துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  இப்பொழுது சுவையான முளைக்கீரை பொரியல் தயார்.


முளைக்கீரை கடையல் செய்முறை 

முளைக்கீரை பயன்கள் Mulai Keerai benefits in Tamil (2)

   தேவையான பொருட்கள் 

 • ஒரு கட்டு முளைக்கிறை
 • அறை கப் அளவு  துவரம் பருப்பு
 • இரண்டு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
 • மஞ்சள் தூள்
 • சீரகம் அரை ஸ்பூன்
 • 5 பல் பூண்டு
 • 5 பச்சை மிளகாய்
 • இரண்டு தக்காளி
 • இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • கால் டீஸ்பூன் கடுகு
 • சிறிதளவு பெருங்காயத்தூள்
 • இரண்டு காய்ந்த மிளகாய்
 • சிறிதளவு சின்ன வெங்காயம்

 

  முதலில் ஒரு அறை கப் அளவிற்கு துவரம் பருப்பு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும். இதனை மூன்று முறை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் பத்து நிமிடம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.

  பத்து நிமிடம் நன்றாக ஊறிய பின் இதனை வேகவைக்கவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், சீரகம் அரை ஸ்பூன், 5 பல் பூண்டு, 5 பச்சை மிளகாய் சேர்த்துகொள்ளவும்.

  பருப்பானது பாதி அளவு வெந்த பிறகு இரண்டு தக்காளியினை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இடையில் இதனை கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

  பருப்பு இப்பொழுது நன்றாக மலர்ந்து வந்திருக்கும் பொழுது முளைக்கிறையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மூன்று முறை கழுவி எடுத்து பருப்புடன் சேர்த்துக் கொள்ளவும்.

  கீரையை சேர்த்த பின்பு நீண்ட நேரம் கீரையை வேக வைக்க கூடாது. ஒரு மூன்று நான்கு நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். அதற்கு மேல் வேக வைத்தால் கீரையோட நிறம் மற்றும் மனம் இரண்டுமே மாறிவிடும்.

  இப்பொழுது நீரினை தனியாக வடிகட்டி விட்டு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். கீரைக்குத் தேவையான அளவு உப்பினை சேர்த்து மத்தை வைத்து நன்றாக கடைந்து கொள்ளவும்.

 பிறகு மற்றொரு பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனுடன் கால் டீஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

 கடுகு வெடித்ததும் சிறிதளவு பெருங்காயத்தூள், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

  இந்த தாலிப்பினை  கீரையுடன் சேர்த்து நன்றாக கடைந்து கொள்ளவும்.
இப்பொழுது சுவையான முளைக்கீரை கடையல் தயார்.

 

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?