சோயா பீன்ஸ்|Meal Maker benefits in Tamil

Meal Maker benefits in Tamil

  அனைவருக்கும் மீல்மேக்கர் என்பது மிகவும் பிடித்த ஒரு உணவாக தான் இருக்கும்.

Meal Maker benefits in Tamil

  இது பார்ப்பதற்கு இறைச்சி போலவே இருக்கின்றது. ஆனால் இது சைவத்தோடு சேர்ந்தது.

Meal Maker benefits in Tamil (860 × 573px)

 •  இதுஎதிலிருந்து கிடைக்கிறது 
 • இதில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது
 •  இது அடிக்கடி சாப்பிடலாமா 
 • இதனால் உடலுக்கு என்ன நல்லது மற்றும் என்ன தீங்கு விளைவிக்கின்றது என்பதனைப் பற்றி பார்ப்போம்.

   மீல் மேக்கர் இன்று சொல்லக்கூடிய இந்த உணவு பொருள் சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

   இதனுடைய பெயர் மீல்மேக்கர் கிடையாது. இதனை முதன் முதலாக விற்ற கம்பெனியின் பெயர்தான் மீல்மேக்கர். இதனை இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இதுஎதிலிருந்து கிடைக்கிறது

   எதில் அதிக புரதச்சத்து இருக்கின்றது என்று பார்த்தால் இந்த சோயாவில் தான்.

   இதனை கொண்டு சோயா எண்ணெய் என பலவித பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

   அதாவது எள்ளு மற்றும் ஆமணக்கு, தேங்காய் இதில் இருந்து எண்ணெயை எடுக்கும் பொழுது புண்ணாக்கு என்று சொல்லக்கூடிய ஒரு பொருள் கிடைக்கும்.
அதுபோல தான் இந்த சோயா பீன்ஸில் இருந்து என்னை எடுக்கும் பொழுது அந்த புண்ணாக்கு கிடைக்கின்றது. அந்த புண்ணாக்கு புண்ணாக்கினை இறைச்சி உருவங்களில் செய்யப்படுகின்றது. இதனை தான் மீல் மேக்கர் என்று கூறுகின்றோம்.

   சைவ உணவு மட்டும் தான் சாப்பிடுவேன்,அசைவ உணவுகளை சாப்பிட மாட்டேன் என்று கூறுகின்றவர்கள். இறைச்சியின் சுவையை அனுபவித்து பார்க்கணும் என்றால் இந்த மீல்மேக்கர் அதனை பூர்த்தி செய்யும்.

இதில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளது

    இந்த மீல்மேக்கரில் புரதச்சத்து அதிகமாக உள்ளதனால் இதனை இறைச்சிக்கு சமமாக வைத்துப் பார்க்கலாம்.

  யாரெல்லாம் அசைவம் சாப்பிட மாட்டீர்களோ அவர்கள் அனைவரும் தாராளமாக இந்த மீல்மேக்கரை சாப்பிடலாம்.

  ஒரு அசைவ உணவு சாப்பிடும் போது நம் உடலுக்கு எந்த அளவு புரதம் கிடைக்கிறதோ, அந்த அளவிற்கு இந்த மீல்மேக்கரை சாப்பிடும் பொழுது புரதச்சத்து கிடைக்கிறது.

  அதாவது அசைவ உணவுக்கு இணையான அளவுக்கு புரதம் இதில் கிடைக்கின்றது என்பதை, 1980களில் தான் இந்த மேல் மேக்கரை கல்யாண வீடுகளிலும் மற்றும் விசேஷ வீடுகளிலும் சைவ பிரியாணி உடன் இதை சேர்த்து சமைக்க ஆரம்பித்தார்கள்.

   அப்பொழுது இதனுடைய சுவை பிடித்து மக்கள் இதனை கடைகளில் தேடித் தேடி வாங்க ஆரம்பித்தனர்.

   உங்கள் உடைய உடலில் புரதச்சத்து குறைவாக இருந்தால் இந்த மீல்மேக்கரை உங்கள் உணவுகளில் கட்டாயம் சேர்த்து வரவும்.

   இந்த சோயாவினை குறிப்பிட்ட இடைவெளிகள் விட்டு உணவுகளில் சேர்த்துக் கொண்டு வரலாம் இதனால் உடலுக்கு புரதச்சத்து கிடைக்கின்றது.

    இருக்கின்ற தானிய வகையிலேயே சோயாவில் தான் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. அதனால் சோயாவினை நம் உணவில் சேர்த்துக் சேர்த்துக் கொண்டால் நல்லது.

நன்மைகள்

   100 கிராம் சோயாவில் 28.6 கிராம் புரோட்டின் உள்ளது.

   இந்த சோயாவில் நம் உடலுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் இருக்கின்றது. அதாவது அசைவ உணவிற்கு இணையான அளவிற்கு புரோட்டின் இந்த சோயா பீன்ஸில் உள்ளது.

நார்ச்சத்து

Meal Maker benefits in Tamil

   சோயா பீன்ஸில் கொழுப்பு கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக தான் உள்ளது. இதில் நார்ச்சத்து தேவையான அளவு உள்ளதால் சோர்வடைந்து உள்ளவர்களுக்கு இது புத்துணர்ச்சியை கொடுக்கின்றது.

இரும்புச்சத்து

Meal Maker benefits in Tamil

   சோயா பீன்ஸில் மினரல்ஸ் அதிகமாக உள்ளது. இது ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்று கூட கூறலாம்.

  இந்த சோயாவில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து ரத்தத்தையும் பாதுகாக்கின்றது.

தீமைகள்

சோயா பீன்ஸில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் கூட இதனை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது சில பாதிப்புகளையும் உண்டாக்குகின்றது.

ஹார்மோன்களில் மாற்றம்

   சோயாவினை சிறிதும் இடைவெளி இல்லாமல் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டு வருவதனால் உடலில் உள்ள ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படும்.

விந்தனுக்கள் குறைபாடு

Meal Maker benefits in Tamil (1)

   ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு  இது மாதிரியான பிரச்சனைகளை இது ஏற்படுத்தி விடும்.

தைராய்டு பிரச்சனை

அதுபோல தைராய்டு சுரப்பியும் சரியாக இயங்க விடாது. இதனால் உடலில் தைராய்டு பிரச்சனை வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சோயாபீன் சம்பந்தமான உணவு பொருட்கள் முக்கியமாக மீல்மேக்கர்,இவை அனைத்தையும் குறிப்பிட்ட கால இடைவெளிகள் விட்டு உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

    இதில் இவ்வளவு நன்மைகள் உள்ளது என்று தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

 கிரேவி செய்முறை

Meal Maker benefits in Tamil (2)

தேவையானபொருட்கள்

 • ஒரு கப் அளவிற்கு சோயா துண்டு
 • இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • பிரியாணி இலை
 • இரண்டு துண்டு பட்டை 
 • ஒரு கிராம்பு
 • அரை நட்சத்திர சோம்பு
 • மூன்று பெரிய வெங்காயம்
 • மூன்று தக்காளி பழம்
 • தேவையான அளவு இஞ்சி பூண்டு
 • மிளகாய் தூள்
 • மஞ்சள் தூள்
 • மல்லித்தூள்
 • அரைடம்ளர் தயிர்
 • கொத்தமல்லி இலை

   சோயா துண்டுகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதனை வெதுவெதுப்பான சுடுதண்ணியில் சேர்த்து ஒரு பத்து நிமிடம் நன்றாக ஊற வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

   ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் நாம் ஏற்கனவே ஊற வைத்து தெளிந்த பிழிந்த சோயா துண்டுகளை இதில் சேர்த்து நன்றாக வருத்துக் கொள்ளவும்.

   இந்த மாதிரி செய்வதனால் சோயா துண்டுகளில் உள்பகுதியில் இருக்கக்கூடிய நீரானது வந்துவிடும். இதனை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

  இப்பொழுது கிரேவி செய்வதற்காக  பாத்திரத்தினை சூடு செய்து கொள்ளவும்.இதில் நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும்.

  இதில் சிறிய பிரியாணி இலை, இரண்டு துண்டு பட்டை, ஒரு கிராம்பு மற்றும் அரை நட்சத்திர சோம்பு போட்டு நன்றாக பொரிய விட வேண்டும் .

   இதனுடன் மூன்று பெரிய வெங்காயத்தினை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, மூன்று தக்காளி பழத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதிலிருந்து என்னை பிரிந்து வரும் வரை காத்திருக்கவும்.

   பிறகு இதற்குத் தேவையான அளவிற்கு இஞ்சி பூண்டினை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். இதன் பச்சை வாசனை இல்லாதவாறு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

   இப்பொழுது மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதனுடன் அரைடம்ளர் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

   இப்பொழுது ஏற்கனவே வறுத்து வைத்துள்ள சோயா துண்டுகளை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் .

  நன்றாக கிரேவி பதம் வரும் வரை காத்திருக்கவும். பிறகு சிறு சிறு துண்டுகளாக கொத்தமல்லி இலையை வெட்டி இதனை சேர்த்துக் கொள்ளவும்.

  இப்பொழுது சுவையான கிரேவி தயாராகி விட்டது இதனை பூரி, பரோட்டா போன்ற உணவுகளில் சேர்த்து உண்ணும் பொழுது சுவையாக இருக்கும்.

சோயா பீன்ஸ் பிரியாணி செய்முறைMeal Maker benefits in Tamil (3)

தேவையானபொருட்கள்

 • 150 கிராம் சோயா துண்டு
 • 2 ½ அளவிற்கு பாஸ்மதி அரிசி
 • நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
 •   நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • இரண்டு டேபிள் ஸ்பூன்  டால்டா
 • இரண்டு பட்டை
 • ஏலக்காய் ஆறு கிராம்
 • 6 பச்சை மிளகாய்
 • நான்கு டேபிள் ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
 • ஒரு அன்னாசி பூ
 • இரண்டு பிரியாணி இலை
 • நான்கு பெரிய வெங்காயம்
 • நான்கு தக்காளி
 • ஒரு கைப்பிடி புதினா  
 • ஒரு கைப்பிடி  மல்லி இலை
 • இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள்
 • ஒரு டீஸ்பூன் கரம் மசாலா
 • பாதி அளவு எலுமிசை பழ சாறு
 • இரண்டு டேபிள் ஸ்பூன்  தயீர்
 • தேவையானஅளவுஉப்பு
 • நான்கு டேபிள் ஸ்பூன்  இஞ்சி பூண்டு விழுது

 

   150 கிராம் அளவிற்கு 150 கிராம்களை எடுத்துக் கொள்ளவும்

   இப்பொழுது இந்த சோயா துண்டுகள் மூழ்கும் அளவிற்கு சுடு தண்ணீரில் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு இதனை நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

   நான் இன்று 2 ½ அளவிற்கு பாஸ்மதி அரிசி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி பிறகு ஊற வைத்துக் கொள்ளவும்.

   ஒரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து நன்றாக சூடான பிறகு நெய் இரண்டு டேபிள் ஸ்பூன் இதனுடன் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு டால்டா சேர்த்துக் கொள்ளவும்.

  இப்பொழுது என்னை நன்றாக சூடான பிறகு இரண்டு பட்டை, ஏலக்காய் ஆறு கிராம்,ஒரு அன்னாசி பூ, இரண்டு பிரியாணி இலை சேர்த்து எண்ணெயில் நன்றாக பொரியும் வரை காத்திருக்கவும்.

  நன்றாக பொறிந்த பிறகு நாலு பெரிய வெங்காயத்தினை நீள வடிவில் மெலிதாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.

   இப்பொழுது இந்த வெங்காயத்தினை நன்றாக வதக்கிக்கொள்ளவும், பிரியாணியை பொறுத்தவரை வெங்காயம் நன்றாக வதக்கினால் தான் சுவையாக இருக்கும்.

  நன்றாக வதங்கிய பின்பு நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது,6 பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் உங்கள் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.

  நாலு தக்காளியினை சிறு துண்டுகளாக வெட்டி இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இதன் தோல் பிரிந்து வரும் அளவிற்கு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

   அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவிற்கு புதினா மற்றும் மல்லி இலையை சேர்த்துக் கொள்ளவும்.
   பிரியாணியில் எந்த அளவிற்கு மல்லி மற்றும் புதினா சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு வாசனையும் அருமையாக இருக்கும்.

  இப்பொழுது மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து இதனுடன் நாம் ஊரவைத்துள்ள சோயா துண்டுகளை சேர்த்து  நன்றாக மசாலாவுடன் கலந்து கொள்ளவும்.

  இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தயீர் சேர்த்துக் கொள்ளவும். இதில் பாதி அளவு எலுமிச்சம் பழத்தின் சாறு சேர்த்துக் நன்றாக கிளறி கொள்ளவும்.

   1 டம்ளர் அளவிற்கு அரிசி எடுத்திருந்தால் அதே டம்ளரில் 1 ½ தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த அளவில் தண்ணீர் சேர்த்துக் நன்றாக கிளறி கொள்ளவும்.

   இப்பொழுது உப்பினை சரிபார்த்து கொள்ளவும். உப்பு சிறிதளவு அதிகமாக இருந்தால்பிரியாணி இல்  சரியாக இருக்கும்.

   இப்பொழுது தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு,அரிசியில் உள்ள தண்ணீரினை வடித்து விட்டு இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். அரிசி ஊற வைத்திருந்ததால் லேசாக கிளறி விடவும்.

   அடுப்பின் அளவை குறைத்து விட்டு ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.ஒரு விசில் வந்த பிறகு அடுப்பினை அணைத்து விடவும்.

    ஐந்து நிமிடம் கழித்து  இறக்கினால்,சுவையான பிரியாணி சாப்பிட தயாராகிவிட்டது.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?