கொடுக்காப்புளி | Kodukkapuli fruit benefits in Tamil

கொடுக்காப்புளி | Kodukkapuli fruit benefits in Tamil

Kodukkapuli fruit benefits in Tamil

  பலவகை மருத்துவ குணங்கள் கொண்ட கொடுக்காபுளி(Pithecellobium dulce)  மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் ஆகியன மாதவிடாய் சிக்கல், நீர்கடுப்பு ,ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகவும் பயன்படுகிறது.

kodukkapuli fruit benefits in tamil (5)

   கொடுக்காப்புளி சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதால் கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கும் சக்தியாக விளங்குகின்றது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச்சாமன்கள் செய்ய பயன்படுகிறது கொடுக்காப்புளி மரத்தில் தயாரிக்கும் மர சாமான்கள் நீடித்து உழைக்கும்.

   ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லக்கூடிய இந்த கொடுக்காப்புளியில் என்னென்ன வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. 

   கொடுக்காப்புளி நாம் சாப்பிட்டு வருவதனால் நமக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ பயன்கள் என்னென்ன, கொடுக்காப்புளி மரத்திலிருந்து கிடைக்க கூடிய இலைகள், கொடுக்காப்புளி பழத்தில் இருந்து கிடைக்க கூடிய விதைகள் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.

  கொடுக்காப்புளியில் உள்ள சத்துக்கள்

  இப்பொழுது கொடுக்காப்புளியில் என்னென்ன வைட்டமின் உள்ளது என்று பார்க்கலாம்

 • வைட்டமின் ஏ
 • வைட்டமின் பி
 • வைட்டமின் சி
 • வைட்டமின் பி1
 • வைட்டமின் பி2
 • வைட்டமின் பி6
 • நார்ச்சத்து
 • இரும்பு சத்து
 • கால்சியம்
 • பாஸ்பரஸ்
 • பொட்டாசியம்

         போன்ற ஏராளமான சத்துக்கள் இந்த கொடுக்காப்புளியில் உள்ளது.

    இவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ள கொடுக்காப்புளியினை சாப்பிட்டு வருவதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதனை பற்றி பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

kodukkapuli fruit benefits in tamil (1)

   இந்த கொடுக்காப்புளியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதனால் நம் உடலில் இருக்கக்கூடிய வெள்ளை அணுக்களுடைய எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

பித்தப்பை கற்கள் 

  பித்தப்பை கற்கள் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றவர்கள் இந்த கொடுக்காப்புளி சாப்பிட்டு வருவதனால் பித்தப்பை கற்கள் கரைவதற்கு உதவியாகஇருகின்றது.

மஞ்சள் காமாலை, மலேரியா )

kodukkapuli fruit benefits in tamil (2)

    கொடுக்காப்புளி கல்லீரலை பாதிக்கக்கூடிய மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கின்றது.

எலும்பு,பற்கள்

   இந்த கொடுக்காப்புளி சாப்பிட்டு வருவதனால் மிகவும் நல்லது . இந்தகொடுக்காப்புளியில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதனால் இது எலும்புகளையும்,பற்களையும் வலுவாக வைத்துக் கொள்கிறது.

உள் காயங்கள் 

   அது மட்டுமின்றி உட்காயங்கள் சரி செய்யும் ஆற்றல் இந்த கொடுக்காப்புளியில் அதிக அளவு உள்ளது.

மூட்டு பிரச்சினைகள் 

kodukkapuli fruit benefits in tamil (3)

  இது வாதநோயால் உண்டாக கூடிய கீழ்வாதம் ,மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள்,இந்த கொடுக்காப்புளியை சாப்பிட்டு வருவதனால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பல்வலி, பல் வீக்கம் 

   பற்கள் சம்பந்தமான பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு மிகவும் நல்லது இந்த கொடுக்காப்புளி.
  இது பல் ஈறுகளில் இருக்கக்கூடிய இரத்தக்கசிவு, பல்வலி, பல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகக்கின்றது.

வயிற்று பிரச்சனை

  செரிமான சம்பந்தமான பிரச்சனைகளான அஜீரணம் ,வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த கொடுக்காப்புளியை சாப்பிட்டு வருவதனால் நல்ல பயன்கிடைக்கின்றது.

உடற்கழிவு 

  இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து உடலுக்கு உட்பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றி குடல் சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் பாதுகாத்து நம்முடைய குடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவி செய்கிறது.

உடல் எடை 

   அதிக கொலஸ்ட்ரால் மற்றும் அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு இந்த கொடுக்காப்புளி மிகவும் நல்லது.

   இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலில் தேவையில்லாத கொழுப்பை எதிர்த்து குறிப்பாக (எல் டி எல் )கொலஸ்ட்ரால் என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பினை வெளியேற்றி ,நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது  இந்த கொடுக்காப்புளி பலம்.

சர்க்கரை நோய் 

   சர்க்கரை நோயாளிகள் எவ்வித தயக்கமும் இல்லாமல் இந்த கொடுக்காப்புளியை சாப்பிட்டு வரலாம்

   டைப் 2 சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வர, இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த கொடுக்காப்புளி.

புற்றுநோய் 

kodukkapuli fruit benefits in tamil (4)

   புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த கொடுக்காப்புளில் அதிகமாக உள்ளது.

  கொடுக்காப்புலியில் இருக்கக்கூடிய பல சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு இந்த கொடுக்காப்புளி உதவுகின்றது.

  குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்று சொல்லி நிறைய ஆராய்ச்சிகளில் தெரிவித்து இருக்கின்றனர்.

  கொடுக்காப்புளி உடலுக்கு மட்டுமின்றி அழகு சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் மருந்தாக இருக்கின்றது.

கொடுக்காப்புளி இலை

kodukkapuli fruit benefits in tamil (6)

அஜீரண பிரச்சனை 

  கொடுக்காப்புளி இலைகளை நன்றாக அரைத்து அதனை குடித்து வருவதால் அஜீரண பிரச்சினைகள் குணமடையும்.

  அதுமட்டுமின்றி இந்த வெயில் காலத்தில் ஒரு சிலருக்கு உடல் சூட்டினால் (லூஸ் மோஷன்) மாதிரியான பிரச்சனைகள் இருக்கும். இந்த மாதிரி பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த கொடுக்காப்புலியின் சாறு குடித்து வருவதனால் அந்த பிரச்சனைகள் தீர்வதற்கு உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க;துவாரம் பருப்பு| Thuvaram paruppu in Tamil

 

கொடுக்காப்புளி விதை

a

  கொடுக்காப்புளி விதை எதற்கு பயன்படுத்துவார்கள் என்றால் முக அழகுக்கு பயன்படுத்துவார்கள். நன்றாக அரைத்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள்,கருவளையம், தேமல், கரும்புள்ளிகள் மற்றும் முகச்சுருக்கம் இதுபோன்ற பிரச்சனைகளை எளிமையாக சரி செய்கிறது  இந்த கொடுக்காப்புளி விதைகள்.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?