காராமணி பயன்கள் | Karamani Benefits in Tamil

காராமணி பயன்கள் | Karamani Benefits in Tamil

 

காராமணி பயன்கள் | karamani benefits in tamil

Karamani Benefits in Tamil 

  காராமணியை (தட்டை பயறு) நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆப்பிரிக்காவுல பயிரிட்டு வந்திருக்கிறார்கள்
   ‘கிமு 200 முதல் 300 ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் இது அறிமுகப்படுத்ப்படிக்கு’.
தற்பொழுது தெற்காசியா, ஆப்பிரிக்கா ,தென் அமெரிக்கா ,அமெரிக்கா, இந்த மாதிரியான இடங்களிலும் இது அதிகமாக பயிரிடப்பட்டிருக்கு“ஏழைகளின் அமிர்தம்” என அழைக்கப்படுகிற காராமணியில் அப்படி என்னதான் இருக்குன்னு பாப்போம்.


சத்துக்கள்

 •  100 கிராம் காராமணியில 47 கலோரி இருக்கு
 •  கார்போஹைட்ரேட் 8.35 கிராம் இருக்கு
 •   புரதம் 2.8 கிராம் இருக்கு

 கொழுப்பு 0.40 கிராம் இருக்கிறது. இது தவிர போலேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி,கால்சியம், இரும்பு, மெக்னீசியம்,பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இந்த இந்த காராமணியில் உள்ளது.

எதற்காக நாம் காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்….? சேர்த்துக் கொள்வதால் என்ன நன்மைகள்.

உடல் எடையை குறைகிறது

காராமணி பயன்கள் | karamani benefits in tamil (1)

     உடல் எடையை குறைக்க நினைக்கிறவர்கள் இந்த காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம், இதில் கரையக்கூடிய, கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டுமே உள்ளது. கரையக்கூடிய நார்ச்சத்தானது சிறிதளவு சாப்பிட்ட உடனே வயிறு நிறைஞ்ச உணவு உண்டாக்கி அடிக்கடி எதையாவது சாப்பிடணும் அப்படிங்கற உணர்வை தூண்டாம இருக்கும், இதன் காரணமாக எடையை கட்டுப்பாட்டில் வச்சுக்க முடியும்.

    உலர்ந்த காராமணிய உடல் எடைய குறைக்க நினைக்கின்றவர்கள் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம், இதனால் சுலபமாக உடல் எடையை குறைக்க முடியும், அதோடு “புரத குறைபாடு” பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.

இருதயம் மற்றும் சிறுநீரகத்தை சீரக்குகிறது


    இருதயம்,சிறுநீரகம் உட்பட உடலில் இருக்கிற முக்கியமான உறுப்புகள் எல்லாம் சீராக இயங்க வேண்டும் என்றால் அவசியம் தேவையான பொட்டாசியம் இந்த காராமணியில் அதிகமாகவே உள்ளன.

நீரழிவு நோயினைகட்டுபடுதிகிறது


    காராமணியில் உள்ள ஃப்ளேமனைட்ஸ் இருதய செயலிழப்பு நோய் வராமல் தடுக்கிறது, அதோடு இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது, இது மட்டுமின்றி நீரழிவு நோயையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.

   ‘ கர்ப்பிணிகளுக்கு தேவையான போலேட் நிறைந்த உணவுகள் உண்ணுவதன்மூலம் பிறக்கின் குழந்தையை நரம்பு மண்டல கோளாறு இல்லாமல் காப்பாற்றக்யது’, இதனால் கர்ப்பிணிகளும் இந்த காராமணிய எடுத்துக் கொள்ளலாம்.

புற்றுநோய் வராமல்தடுகிறது

காராமணி பயன்கள் | karamani benefits in tamil (2)

    காராமணியில் இருக்கக்கூடிய லிக்நீன் சில வகையான புற்றுநோய்,பக்கவாதம், ஹைப்பர் டென்சன் இந்த மாதிரியான நோயிலிருந்து நம்மை காப்பாற்றக் கூடியது இந்த காராமணி, அதோடு இந்த பசுமையான காயில் இருக்கக்கூடிய அதிகமான அளவில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிரென்ஸ் இந்த இரண்டுமே புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாக்க கூடியது.

செரிமான பிரச்சனைகளை தடுகின்றது


  காராமணியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமான தன்மையை மேம்படுத்துவதோடு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளையும் இது போக்க கூடியது. இதில் இருக்கக்கூடிய கரையாத நார்ச்சத்து மலமிளக்கியாக செயல்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் எளிதாக இது சரி செய்யக் கூடியது.

  ரத்த சோகை உள்ளவர்கள் காராமணிய அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம், ஏனென்றால் இதில் இருக்கக்கூடிய இரும்புச் சத்தானது ‘ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கூடியது/’, இதனால் ரத்த சோகை பிரச்சனையிலிருந்து எளிதில் வெளியேறிவிடலாம், ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துவதனால் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்க ஆரம்பிக்கும்.

 

     சரும செல்கள் பழுதடைவதனை தடுகிறது

  விட்டமின் ஏ ஆனது சர்ம அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான விட்டமின் என்று கூறலாம்.இந்த விட்டமின் ஏ மற்றும் சி இரண்டுமே காராமணியில் உள்ளது இந்த இரண்டும் சரும செல்கள் பழுதடைவதனை தடுத்து வயதாகுவதனால் ஏற்படுகின்ற சரும சுருக்கங்களை தடுக்க கூடியது.இதனால் முதிர் வயதிலும் முகத்தில் சுருக்கங்கள் வருவதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் முதுமை தோற்றத்தினை தள்ளி போடணும்னு நினைக்கின்றவர்கள் அடிக்கடி காரமணியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

      எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துகிறது

  இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கக் கூடியது. அடிக்கடி காராமணியை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது தொற்று நோய் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்

கூந்தல் உதிர்வை தடுக்கிறது

karamani benefits in tamil காராமணி பயன்கள்

     தொடர்ந்து கூந்தல் உதிர்வு பிரச்சனையை கண்டு பலர் அவதிப்படுவார்கள் அப்படி இருக்கின்றவர்கள் காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து அதிகமாக காராமணியில் உள்ளது, காராமணியை நீங்கள் உட்கொள்ளும் பொழுது விரைவாகவும், அடர்த்தியாகவும் கூந்தல் வளர்வதை நீங்கள் காண முடியும். ‘புரத குறைபாடு உள்ளவர்களுக்கு காராமணி மிகவும் அவசியமான ஒரு உணவாகும்’

பக்க விளைவுகள் 

 வாயு தொந்தரவு

     வாயு தொந்தரவு போன்ற பக்கவிளைவுகளும் காராமணி பயிரில் உண்டாகும். இதை தவிர்க்க பூண்டு சோம்பு சீரகம் இது இது போன்றவைகளை காராமணியுடன் சேர்த்து சமைக்கும் பொழுது இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.சிலருக்கு காராமணி சாப்பிட்ட பின்பு வயிறு அசௌகரியமா இருக்கும்,
இப்படிப்பட்டவங்க காராமணி எடுத்துக்கிற அளவு கொஞ்சம் குறைச்சுக்கிறது நல்லது, என்னதான் சொன்னாலும் காராமணி உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது அவ்வளவு ருசி அருமையாக இருக்கும்.

செய்முறை 


   காய்கறி கடைகளில் வாங்க கூடிய பச்சையான காராமணியை பொறியியல் மாதிரி செய்து சாப்பிடலாம்.

 •   சில பேர் உலர்ந்த காரமணியை வாங்கி இருப்பீர்கள் இதனை குக்கரில் வேகவைப்பதற்கு முன்பாக அரை மணி நேரம் ஊற வைத்து அதன் பிறகு வேகவைத்து நீங்கள் பயன்படுத்தலாம்.
 •     இரவு முழுவதும் காராமணியை ஊற வைத்து, சிலர் காலையில் பயன்படுத்துவது உண்டு. நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய புளிக் குழம்பு,காரக்குழம்பு இதனுடன் இந்த காராமணியை சேர்த்துக் கொள்ளலாம்.இதருடன் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு இது போன்ற காய்கள் சேர்த்துக் கொள்ளும் பொழுது ருசியாக இருக்கும். இது தவிர சுண்டல் போன்ற உணவையும் காராமணியில் செய்து கொள்ள முடியும்.

காராமணி குழம்புசெய்முறைkaramani benefits in tamil காராமணி சுண்டல்

       முதலில் பத்திரத்தில் எண்ணையை ஊற்றவும். பிறகு அதில் கடுகு சேர்த்துக் கொள்ளவும், பிறகு அதில் கால் டீஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும், நறுக்கி வைத்த பூண்டு கருவேப்பிலை வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்,உடன் தேவை என்றால் காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும், அரைத்து வைத்த தக்காளி சாறினை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும், தக்காளி வெங்காயம் அனைத்தும் வதங்கிய பின்பு எண்ணெய் பிரிந்து வரும் பொழுது ஊற வைத்திருந்த காராமணியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்,அரைத்து வைத்திருந்த தேங்காய் பால்,காய்ந்த மிளகாய் இதனையும் சேர்த்துக் கொள்ளவும்,  தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக்கொண்டு குக்கரை மூன்று விசில் வர வரை காத்திருக்கவும், பிறகு சுவையான காராமணி குழம்பு ரெடி.காராமணி சுண்டல் செய்முறை

karamani benefits in tamil காராமணி சுண்டல்

தேவையான பொருட்கள்

 • காராமணி ஒரு கப் 
 • தண்ணீர்
 • உப்பு
 • வெங்காயம்
 • பச்சை மிளகாய்
 • துருவிய தேங்காய்
 • எண்ணெய்
 • உளுந்தம் பருப்பு
 • கடுகு
 • சீரகம்
 • சிவப்பு மிளகாய்
 • பெருங்காயத்தூள்
 • கறிவேப்பிலை

 

  பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணையை ஊற்றிக் கொள்ளவும், ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் சீரகம் ,இரண்டு காய்ந்த மிளகாய் ,கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் ,சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்,இதனுடன் சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்துக் கொள்ளவும், வெங்காயம் நன்றாக வதங்கிய பின் சிறிதாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய்யினை இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்,பிறகு வேக வைத்துள்ள காராமணியை நன்றாக கலந்து கொள்ளவும், தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும், கடைசியில் அரை மூடி தேங்காய் திருகி சேர்த்து நன்றாக கிளறவேண்டும், இப்பொழுது சுவையான காராமணி சுண்டல் ரெடி.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?