கலாக்காய் | Kalakai benefits in Tamil

கலாக்காய் | Kalakai benefits in Tamil

Kalakai benefits in Tamil

நாளை கிடைக்கப் போகும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் கலாக்காய் சிறந்தது என்பது பழமொழி.

Kalakai benefits in Tamil (1)

  அவ்வளவு மருத்துவ பண்புகளைக் கொண்டது இந்த கலாக்காய்

நன்மைகள்

   இந்த கலா காயினை யார் சாப்பிடலாம் என்று கேட்டால் மந்தமாக இருப்பவர்கள், அதாவது எப்பொழுதும் பசி இல்லை என்று கூறும் உடம்பு உள்ளவர்கள் இந்த கலாக்காயினை சாப்பிட்டு வரலாம். இதனை சாப்பிட்டு வருவதனால் பசியை தூண்டுகிறது.

பித்தம்

  இது மட்டும் இன்றி பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் சரி செய்யக்கூடியது.

  அதாவது பித்த மயக்கம், பித்தத்தினால் வரக்கூடிய உடல் அரிப்பு,பித்தக் கிறுகிறுப்பு,மசக்கை வாந்தி இப்படி பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இக்கலாக்காயினை சாப்பிடுவதன் மூலம் முழு நிவாரணம் கிடைக்கும்.

உடல் சூடு

Kalakai benefits in Tamil (2)

  சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும், அப்படிப்பட்டவங்க இந்த கலாக்காயினை சாப்பிட்டு வரும் பொழுது உடல் சூடு தணிக்கிறது.

  ஒரு சிலருக்கு ஈறுகளில் இரத்தம் வடியும் அப்படிப்பட்டவர்கள் இக்கலாக்காய் சாப்பிட்டு வருவதனால் ஈறுகளில் இரத்தம் வடிவது தடுக்கப்படுகிறது.

கேன்சர் 

   கலாக்காய் கேன்சர் போன்ற வியாதிகள் வராமல் தடுக்கிறது. மேலும்உடல் எடையை குறைக்க உதவுகிறது.

   பற்களில் உள்ள பிரச்சனைகள் அனைத்திற்கும் கலாக்காய் மிகவும் நல்லது,உடலில் இருக்கும் பித்தத்தை கலாக்காய் நன்கு கட்டுப்படுத்துகிறது.

இது நம் கண் பார்வைக்கு மிகவும் நல்லது,இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் நம் கிட்னி பாதிப்பாகாமல் இது பாதுகாக்கிறது.

இரத்த சோகை

  இக்கலாக்காயினை பெண்கள் அவசியமாக எடுத்துக் கொள்ளக்கூடிய காய். ஏனென்றால் பெண்களுக்கு தான் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.அதனால் கலாக்காயில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளதால் பெண்களுக்கு இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு, இந்த இக்கலாக்காயினை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

கண் பார்வை 

Kalakai benefits in Tamil (3)

  அடுத்ததாக இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் ஏ நிறைந்திருப்பதனால் நம்முடைய கண் பார்வையை தெளிவாகும் தன்மை உடையது.

   இவ்வளவு அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த கலாக்காய் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையில் இருக்கும்.இது பச்சை நிறமும் சிவப்பு நிறமும் கலந்த ஒரு நிறத்தில் இருக்கும்.இக்கலாக்காய் கிடைத்தால் கண்டிப்பாக அனைவரும் வாங்கி பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

(INSTANT)கலாக்காய் ஊறுகாய் செய்முறை 

தேவையான பொருட்கள்

 • கலாக்காய்
 • இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
 • அரை டீஸ்பூன் கடுகு
 • சிறிதளவு கருவேப்பிலை
 • கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
 • தேவையான அளவு உப்பு
 • ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்

செய்முறை

  முதலில் கலாக்காயினை மூன்று முறை தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.

  பிறகு ஒரு துணியில் கலாக்காயில் உள்ள நீரினை துடைத்துக் கொள்ளவும். ஈரம் எதுவும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். விரைவில் கலாக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  கலாக்காயினை நான்கு துண்டுகளாக வெட்டி அதன் விதையை நீக்கிக் கொள்ளவும்.

   சூடான பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணையை காய வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் கடுகு சேர்த்துக் கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்துள்ள கலாக்காயினை சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு கருவேப்பிலை சேர்த்துக் நன்றாக வணங்கிக் கொள்ளவும்.

  கலாக்காய் நன்றாக வெந்த பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் பெருங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  இப்பொழுது ஊறுகாய் தயார் ஆகிவிட்டது

  இதனை நாம் இட்லி தோசை சப்பாத்தி தயிர் சாதம் போன்ற அனைத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

  இதனை சாதத்தில் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

தோல் நோய்

  இந்த கலாக்காயினை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

   இது நம் மூளையின் செயல் திறனை ஊக்கப்படுத்துகிறது.

 

கலாக்காயில் உள்ளசத்துக்கள் (Kalakai benefits in Tamil)

 • புரோட்டின்
 • கார்போஹைட்ரேட்
 • பைபர்
 • கால்சியம்
 • பாஸ்பரஸ்
 • வைட்டமின் ஏ
 • வைட்டமின் சி

போன்ற சத்துக்கள் உள்ளது

கலாக்காய் ஊறுகாய்

Kalakai benefits in Tamil (4)

தேவையான பொருட்கள்

 • கலாக்காய்
 • கல் உப்பு
 • கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
 • 6 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
 • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
 • 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
 • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
 • கருவேப்பிலலை
 • பெருங்காய பொடி கால் டீஸ்பூன்
 • 4 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்

செய்முறை

   முதலில் கலாக்காயினை இரண்டு துண்டுகளாக வெட்டி விதை அனைத்தையும் நீக்கி விடவும்.

    இதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கொள்ளவும். இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் நன்றாக குலுக்கி வைத்துக் கொள்ளவும்.

   இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இதை அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.

   ஊறுகாய் செய்ய தேவையான பதத்திற்கு வந்த பிறகு ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

 சூடான பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து இது அனைத்தையும் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.இது நன்றாக பொன் நிறத்தில் வருத்த பிறகு ஆற வைத்துக் கொள்ளவும்.

 நன்றாக ஆரிய பிறகு இதனை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.

  சூடான பாத்திரத்தில் நான் டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இதில் அரை டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து சேர்த்துக் கொள்ளவும். கடுகு வெடித்த பின்பு கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஊற வைத்துள்ள கலாக்காயினை சேர்த்துக் நல்லெண்ணெய் உடன் நன்றாக கலந்து கொள்ளவும்.

   பிறகு இதற்கு மூடி போட்டு ஐந்து நிமிடம் நன்றாக வேக வைக்கவும். வெந்த பிறகு பெருங்காயப்பொடி சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 4 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். கலாக்காய் புளிப்பாக இருப்பதனால் காரம் சிறிது அதிகமாக இருந்தால்தான் மிகவும் ருசியாக இருக்கும்.

  இப்பொழுது ஊறுகாய்க்கு தேவையான உப்பினை சேர்த்துக் கொள்ளவும். பிறகு பொடி செய்து வைத்துள்ள சீரகம் வெந்தயம் கடுகு இதனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

 இப்பொழுது அடிப்பினை அணைத்து விடவும், இப்பொழுது சத்து நிறைந்த கலாக்காய் ஊறுகாய் தயார்.

மேலும் படிக்க;முளைக்கீரை பயன்கள் | Mulai Keerai benefits in Tamil

கலாகாய் புளிக்குழம்பு 

Kalakai benefits in Tamil (5)

தேவையான பொருட்கள்

 • 200 கிராம் கலாக்காய்
 • ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு
 • ஒரு டீஸ்பூன் சீரகம்
 • ஒரு டீஸ்பூன் உளுந்து
 • அரை டீஸ்பூன் புழுங்கல் அரிசி
 • மூன்று டீஸ்பூன் கடலை எண்ணெய்
 • ஒரு டீஸ்பூன் கடுகு
 • சிறிதளவு வெந்தயம்
 • கருவேப்பிலை
 • அரை கப் சின்ன வெங்காயம்
 • நாலு பல் பூண்டு
 • இரண்டு தக்காளி
 • கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • இரண்டு ஸ்பூன் மல்லித்தூள்
 • இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள்
 • ஒரு டீஸ்பூன் கல் உப்பு
 • ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  கலாக்காயினை நான்கு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். புளி குழம்பு செய்வதற்கு விதை இருந்தால் மிகவும் துவர்ப்பாக இருக்கும். இதனால் விதையை நீக்கிக் கொள்ளவும்.

  இப்பொழுது புளிக்குழம்பு மசாலா தயார் செய்து கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் உளுந்து, அரை டீஸ்பூன் புழுங்கல் அரிசி சேர்த்து நன்றாக வறுத்து, அதனை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  இப்பொழுது ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். என்னை நன்றாக காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்.

 கடுகு வெந்தயம் நன்றாக பொரிந்த பிறகு சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும். சின்ன வெங்காயம் அரை கப் அளவிற்கு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் .இதனுடன் நான்கு பல் பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் பூண்டு நன்றாக வதங்கும் வரை காத்திருக்கவும்.

  இப்பொழுது கலாக்காய் சேர்த்து நன்றாக வணங்கிக் கொள்ளவும்.

  கலாக்காய் நன்றாக வதங்கிய பின் அரைத்து வைத்த தக்காளி பழத்தினை இதனுடன் சேர்த்து இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் .

  இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்,இரண்டு டீஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியினை சேர்த்து நன்றாக கிளறி விடவும். இதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

  எண்ணை தனியாக பிரிந்து வந்த பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

  இப்பொழுது மருத்துவ குணம் நிறைந்த கலாக்காய் புளிக்குழம்பு தயார். இதனை ஒரு வாரத்திற்கு கூட வைத்து சாப்பிடலாம்.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?