இந்து உப்பு|Indhu Uppu benefits in Tamil

இந்து உப்பு

Indhu Uppu benefits in Tamil

   இந்து உப்பு இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பே இந்துப்பு ஆகும்.

Indhu Uppu benefits in Tamil (1)

Indhu Uppu benefits in Tamil

 இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் (Rock Salt) என்றும் தமிழில் பாறை உப்பு என்றும் கூறப்படுகிறது.

   மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில்  இது காணப்படும்.

 

  உப்பு இயற்கையின் அளிப்பில் ஒரு மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும்.

  மனிதன் நெருப்பைக் கண்டறிந்து சமைக்க தொடங்கிய சில காலங்களிலேயே உணவு தயாரிப்பில் உப்பினை பயன்படுத்த தொடங்கியுள்ளான்.

உப்பு வகை

  • கடல் உப்பு
  • பாறை உப்பு

   போன்ற வகை உப்புக்கள் இருக்கின்றன.

   தற்காலத்தில் மனிதர்கள் அதிக அளவில் பயன்படுத்துவது கடலில் இருந்து பெறப்பட்டு தொழில்நுட்ப ரீதியில் அயோடின் கலந்து உருவாக்கப்படும் உப்பு ஆகும்.

   உப்பு உணவின் சுவையை கூட்டுவதை தாண்டி, உணவு பண்டங்களை கெடாமல் வைத்திருக்கவும் உதவுகிறது.

கிருமி நாசினி

   உப்பு மனிதர்களின் நோயை தீர்க்கும் கிருமி நாசினியாக செயல்படும் ஒரு இயற்கை பொருளாக இருக்கிறது.

  இன்றைய காலகட்டத்தில் அயோடின் கலக்காத சாதாரண உப்பை நாம் பயன்படுத்த வாய்ப்பே இல்லை.ஆனால் அதற்கு மாற்றாக “இமாலயன் உப்பு எனப்படும் இந்துப்பை பயன்படுத்தலாம்”.

   மிகத் தொன்மையான காலத்தில் நம் முன்னோர்கள் சமையலில் இடம் பெற்று வந்த இந்து உப்பு, காலப்போக்கில் பயன்பாட்டில் இருந்து விலகி விட்டது.

 

   இந்துப்பு நம் உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

   பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இந்துப்பு நல்ல நீர் மற்றும் இளநீரில் ஊறவைத்து பதப்படுத்தப்பட்ட பிறகு நமக்கு பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.

  மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

   இந்து  உப்பு

  • கால்சியம்
  • பொட்டாசியம்
  • மெக்னீசியம்
  • சல்பர்
  • ஃப்ளோரைடு
  • அயோடின்
  •  சோடியம் குளோரைடும் உள்ளது.

   குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்துப்பு பசியை தூண்டும்.

   மலத்தை இழக்கும் சாதாரண உப்பில் இருப்பதை போலவே இந்து உப்பிலும் சோடியமும் குளோரைடும் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனிஸ், இரும்பு, துத்தநாகம் உள்ள நுண் சத்துக்களும் உள்ளன.

  அன்றாட உணவில் இந்து உப்பினை வட இந்தியர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

வாதம், பித்தம் மற்றும் கபம்

  பழமை வாய்ந்த தமிழ் சித்த மருத்துவத்தில் இந்து உப்பு உணவில் தினமும் உபயோகித்து வந்தால் வாதம், பித்தம் மற்றும் கபம் என்னும் வியாதிகளின் தன்மை நீங்கி உடல் வலுவாகும் என கூறப்பட்டுள்ளது.

மூல வியாதி

Indhu Uppu benefits in Tamil (2)

   மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

   இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்துப்பு என்பது மிகச் சிறந்த மருந்தாகும்.

செரிமான  திறன்

  இந்து உப்பு எளிதில் செரிமானம் ஆகும் திறன் உள்ளது.

சளி, இருமல்

Indhu Uppu benefits in Tamil (3)

   பித்தத்தை ஏற்படுத்தாது பித்தத்தையும், கபத்தையும் சமம் செய்து சளி, இருமல் வராமல் தற்காத்துக் கொள்கிறது.

   தைராய்டு பிரச்சனைகளுக்கு இந்து உப்பு ஒரு நல்ல மருந்து.

பல் வலிIndhu Uppu benefits in Tamil (4)

  இந்துப்பு கலந்த இளஞ்சுடான வெந்நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும். பல் வலிகள் இரு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.

தோல் சுருக்கம்

  இந்துப்பானது தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும்.தோல் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும் செல்களை புதுப்பிக்கப்படுகிறது.

ஆஸ்துமாIndhu Uppu benefits in Tamil (5)

  இந்துப்பு நுரையீரல் சம்பந்தமான குறைபாடுகளை நீக்குகிறது. நுரையீரலில் ஏற்படும் நியூகசின் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் ஆஸ்துமா ஒவ்வாமை போன்ற உடல் நலப் பிரச்சினைகளை போக்குகிறது.

  தினமும் இரண்டு அல்லது மூன்று டம்ளர் நீருடன் ஒரு சிட்டிகை இந்து உப்பு போட்டு தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

  இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் இந்துப்பு உதவுகிறது.

தைராய்டு பிரச்சினையை தீர்க்கிறது

   குடலில் உணவை நன்றாக உறிஞ்சி உட்கொள்ளவும் நிம்மதியான உறக்கத்தை தரவும் தைராய்டு பிரச்சினையை தீர்க்கவும் இந்து உப்பு நல்ல தீர்வாக இருக்கிறது.

   இந்துப்பை உடலில் தேய்த்து சற்று நேரம் கழித்துக் குளித்து வர உடல் அசதி நீங்கி மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.

டயாலிசிஸ்

  டயாலிசிஸ் என்னும் இரத்தமாற்று முறை மூலம் சிறுநீரக பாதிப்புக்கு வைத்தியம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அல்லது சிறுநீரகத்தை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு தன்னம்பிக்கை முயற்சியாக இரண்டு வாரம் இந்துப்புக் கொண்டு உணவு சமைத்து சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள குறைப்பட்ட தாதுக்கள் அனைத்தும் இயல்பான அளவில் சரியாகி சிறுநீரக இயக்கங்கள் சீராகி உடல் நலம் பெறலாம்.

  மேலும் தினமும் இந்து உப்பை கொண்டு சமைத்த உணவை வீட்டில் அனைவரும் சாப்பிட்டு வர வியாதிகளை அணுகாத நல்வாழ்வை நலமுடன் வாழலாம்.

இந்து உப்பின் தீமை

    இந்து உப்பினை நாம் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது நமது உடலில் இருக்கும் கிட்னியினை பாதிக்கிறது.

இந்த காரணத்தினால் இந்த உப்பினை தவிப்பது நல்லது.

 

மேலும் படிக்க;முளைக்கீரை பயன்கள்

 

இந்து பின் விலை

இந்து உப்பு ஆனது 1 கிலோ 120 ரூபாய்.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?