பார்லி அரிசியின் நன்மைகள் | Barley rice Benefits in Tamil

பார்லி அரிசி (Barley rice Benefits in Tamil)


  Barley rice Benefits in Tamil தமிழில் வாற்கோதுமை என்று அழைக்கப்படுகிறது.

பார்லி அரிசியின் மருத்துவ பயன்கள் Cancer (1)

  பார்லியில் உள்ள பீட்டா குளுக்கன் ஃபைபர், ஃபீனாலிக் அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள், ஃபிட்டியோஸ்டெரால், டோகால் ஆகியவை அதிகம்.

   சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய், உடல் பருமன், மலச்சிக்கல் போன்ற நோய்களைத் தடுக்கும் உணவு.

பார்லி அரிசியின் விலை

Barley Rice – Arisi -பார்லி அரிசி விலை 1 கிலோ ரூபாய் 85 மட்டும் 

பார்லி அரிசி புகைப்படம்

பார்லி அரிசி Barley rice Benefits in Tamil


பார்லி அரிசியின் நன்மைகள் 


   உலக அளவில் மனிதர்கள் உண்ணும் பிரதான உணவு தானியங்களாக அரிசியும் கோதுமையும் இருக்கிறது.

   இதற்கு அடுத்த இடத்தில் அதிகம் பயிரிடப்படும் உணவு தானியமாக பார்லி  இருக்கிறது. இந்த பார்லியை தமிழில் பார்லி அரிசி என்றும் பார்லி தானியம் என்று அழைப்பார்கள்.

  மத்திய ஆசிய நாடுகளில் அதிக மக்களால் உண்ணப்படும் உணவு தானியமாக பார்லி அரிசி இருக்கிறது .

   டயட் இருப்பவர்கள் நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு இருப்பவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைவருமே பார்லி அரிசியை  தினமும் சாப்பிடலாம்.

  பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய பார்லி அரிசி நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


 உடல் எடை குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி அரிசி இருக்கிறது.

   பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும் நீரில் கரையக்கூடிய நார் சத்துக்களும் அதிகம் உள்ளது. இந்த பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்பு சத்துக்கள் உடலில் படியாமல் தடுத்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவி புரிகிறது.

  எனவே தினந்தோறும் பார்லி கஞ்சி அருந்துபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்காமல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

   பார்லி எந்த வகையான புற்று நோயையும் தடுக்கக்கூடிய ஆற்றல் மிக்கது.

பார்லி அரிசியின் மருத்துவ பயன்கள் Cancer

  மேலும் பார்லி அரிசியில் இருக்கும் நார்ச்சத்து குடல் மற்றும் மார்பக புற்று நோய்களை தடுப்பதும் நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோயை குறைத்ததிலும் சிறப்பாக செயல்படுகிறது.

  குறிப்பாக பார்லி தானியங்களை உணவாக அதிகம் பயன்படுத்தும் திபத்திய பகுதியில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்றுநோய் பாதிப்பும் ஏற்படவில்லை என்ற மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

  பார்லி தானியங்களில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு, கால்சியம் பாஸ்பரஸ் மாங்கனிஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் உள்ளது.

  தினமும் அருந்தி வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதியடைகின்றன.

   மேலும் வயதானவர்களுக்கு வருகின்ற மூட்டுகள் தேய்மானம் வலுவிளத்தல்  போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் குறைந்து இருப்பதாக மேலை நாட்டு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Barley rice Benefits in Tamil பார்லி அரிசி மருத்துவ குணம் 2

   நமது உடலில் பித்தப்பையில் ஏற்படும் அதீத அமில சுரப்பும் மற்றும் மற்றும் ட்ரைகிளிசரல் அதிகரிப்பதால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

  குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்தப்பை கற்கள் உருவாகும் சதவீதம் அதிகமாகி இருக்கிறது.பார்லி தானியங்களை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையின் சுரக்கும் அமிலங்களின் அளவு சரிசமமாக காக்கப்பட்டு பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

  பார்லி அரிசியில் பீட்டா குளுக்கோன் சத்துக்கள் அதிகம் உள்ளது இந்த பீட்டா குளுக்கோன் சத்துக்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அன்டிஆக்சிடென்களை பெருக செய்து காக்கிறது.

  மேலும் வைட்டமின் சி சத்துக்களை இந்த பார்லி தானியங்களில் இருப்பதால் அதை சாப்பிடுபவர்கள் உடல் நோயை எதிர்ப்பு மண்டலம் பன்மடங்காக வலுவடைகிறது.

  காயங்கள், புண்கள் வேகமாக ஆறுவதற்கு வழிவகை செய்கிறது.

  செரிமான பிரச்சனைகள் மலச்சிக்கல் கொண்டவர்களுக்கும் சிறந்த பத்திய உணவாக பார்லி அரிசி இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  பழங்களில் இருக்கும் நார்ச்சத்து வயிறு மற்றும் குடல்களின் செரிமானத்திற்கு உதவும் நுண்கிருமிகளின் பெருக்கத்தை அதிகரித்து சாப்பிட உணவுகளை சுலபத்தில் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

  தினமும் பார்லி தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவு அல்லது கஞ்சியோ பருகுவது வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  கருவுற்ற பெண்களுக்கு சிறந்த போஷாக்குகள் நிறைந்த உணவாக பார்லி திகழ்கிறது. பார்லி கஞ்சி தினமும் பருவம் கர்ப்பிணி பெண்களுக்கு உணவுகளில் எளிதில் செரிமானம் ஆகிறது.

  மேலும் பேரை தளத்தில் ஏற்படும் தலைச்சுற்றை கர்ப்ப கால நீரிழிவு போன்றவை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் பார்லி தானியத்திற்கு உள்ளது.

  கருவுற்ற பெண்களின் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலை தூய்மைப்படுத்தும் பணியை பார்லி சிறப்பாக செய்கிறது.
   இரத்தத்தில் சிகப்பு அணுக்கள் குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கு வைட்டமின் 12 சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

  பார்லி அரிசியில் இரும்பு சத்தும் வைட்டமின் பி2 அதிகம் நிறைந்திருக்கிறது தினமும் காலையில் வெறும் வயிற்றில் பார்லி கஞ்சி குடிப்பவர்களுக்கு ரத்த சோக ஏற்படாமல் தடுக்கிறது உடலுக்கு வலிமையும் கொடுக்கிறது.

  ஆண் பெண் இருவரையில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது ஆகும்.

  பார்லி அரிசியில் அர்ஜுனைன் என்னும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கி குழந்தை பேரு கிடைக்க செய்கிறது. பெண்களின் கருப்பையில் அதிக அளவு மூட்டை உற்பத்தியாக ஆவதற்கும் உதவி புரிகிறது மனிதர்களின் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்யக்கூடிய ஒரு தானியமாக பார்லி இருக்கிறது.

  பார்லி கஞ்சி அருந்துபவர்கள் பார்லி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தோலின் ஈரப்பதம் காக்கப்படுகிறது.

Barley rice Benefits in Tamil பார்லி அரிசி மருத்துவ குணம் 1

  தோல் சுருக்கம் தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் தோழி நிறத்தை மேம்படுத்தி இளமைத் தோற்றத்தை அதிகரிக்க செய்கிறது.

   பார்லி அரிசி மாவை நீரில் கலந்து பிசைந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சியின் காணப்படுவதோடு முகப்பருக்கள் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைகிறது.

பார்லி அரிசியின் தீமைகள்   பார்லி அரிசி நான் சாப்பிடவில்லை என்றால் தான் நாம் உடலுக்கு பல தீமைகள் நமக்கு ஏற்படும்.

பார்லி அரிசி சமைப்பது எப்படி? 


பார்லி இட்லி செய்வது எப்படி?

Barley rice Benefits in Tamil பார்லி அரிசி உணவுகள்

தேவையான பொருட்கள்

 • ஒரு டீஸ்பூன் வெந்தயம்
 • அரை கப் பார்லி அரிசி
 • அரைக்கப் உளுந்து
 • மூன்று கப் இட்லி அரிசி வெந்தயம் உளுந்து பார்லி இவை மூன்றையும் சேர்த்து நான்கு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

இட்லி அரிசி தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

இரண்டையும் தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  தேவையான அளவு இரண்டு மாவையும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொண்டு மறுநாள் காலையில் இட்லி ஊற்றலாம்.
சரியான பார்லி இட்லி ரெடி.


பார்லி தோசை செய்வது எப்படி?

Barley rice Benefits in Tamil பார்லி அரிசி சமைப்பது எப்படி


தேவையான பொருட்கள்

 • பச்சரிசி ஒரு கப்
 • பார்லி ஒரு கப்
 • உளுத்தம் பருப்பு கால் கப்
 • தேவையான அளவு உப்புசெய்முறை

  இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து குறைந்தது 4 மணி நேரத்துக்கு ஊறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

  இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா நைசா அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவை ஒரு ஆறு மணி நேரம் அப்படியே மூடி வைத்து விடவும்.

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்

 • கடுகு, சீரகம்
 • கருவேப்பிலை
 • மிளகாய்
 • பெருங்காயத்தூள்
 1. கேரட்
 2. கொத்தமல்லி


  தாளித்து மாவில் கலந்து கொள்ளவும் இது கூடவே கேரட் கொத்தமல்லி இலையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் தோசை உற்ற தேவையான அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.பார்லி கஞ்சி செய்வது எப்படி?

Barley rice Benefits in Tamil பார்லி அரிசி கஞ்சி செய்முறை

இந்த பார்லி கஞ்சி வந்து நம்ம ரெண்டு விதமா செய்யலாம்.

ஊறவைத்து செய்யும் முறை

  அறை கப்பு பார்லி அரிசியை ஒரு மணி நேரத்துக்கு நன்றாக ஊற வைத்து வாஸ் பண்ணி எடுத்துக் கொள்ளவும்.

  ஒரு குக்கரில் பார்லி அரிசியை எடுத்துக் கொள்ளவும் அதனுடன் நான்கு கப்பு தண்ணீர் சேர்த்து ஏழு முதல் எட்டு விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.


பார்லி அரிசி தண்ணீர்

Barley rice Benefits in Tamil பார்லி அரிசி கஞ்சி

  பிறகு இதில் உள்ள பார்லி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

  பார்லி அரிசி தண்ணீர் சிறிதளவு, பார்லி அரிசியையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிது மோர், வாசனைக்காக இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான பார்லி கஞ்சி ரெடி.

ஊற வைக்காமல் செய்யும் முறை.

இப்போ இரண்டு கப் அளவுக்கு பார்லி அரிசி எடுத்துட்டு நான்கு முறை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை நம்ம ஒரு காட்டன் துணியில வைத்து பேன் காத்துல நல்ல உலர வச்சு எடுத்துக்கொள்ள வெண்டும்.

இப்போ அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து இந்த பார்லி அரிசி நன்றாக வாசனை வரும் அளவிற்கு நல்லா பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கப் அளவு உடைத்த பார்லி அரிசியை எடுத்துக் கொள்ளவும் இதனுடன் ஐந்து கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

இது கூடவே மூன்று பல் பூண்டு, சின்ன பீஸ் இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து குக்கரில் 7 முதல் 8 விசில் வரை வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது நாம் சாப்பிடுவதற்கு தேவையான சூப்பரான பார்லி கஞ்சி ரெடி ஆயிடுச்சு இதை நாம் ஸ்பூனில் எடுத்து சாப்பிடலாம். இது கூட சின்ன வெங்காயம், மாங்கா தொக்கு, கொத்தவரங்காய் பொறித்தது, சுண்டக்காய் உப்பு போட்டு பொரித்தது, தொட்டுக் கொள்வதற்கு சுவையாக இருக்கும்.உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு – பார்லி கஞ்சி 

Barley rice Benefits in Tamil பார்லி அரிசி மருத்துவ குணம் 3

கொளுத்தவனுக்கு கொள்ளு


   உடம்பில் அதிகம் உள்ள நீரை பார்லி குறைக்கும். கொள்ளும் பார்லியும் தினம் சாப்பிட்டு வந்தால் ஒரு சில மாதங்களிலே ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.

தேவையான பொருட்கள்

 • வறுத்து பொடித்த கொள்ளு,
 • வறுத்து பொடித்த பார்லி மாவு.
 • சீரகத்தூள் ஒரு சிட்டிகை
 • மிளகுத்தூள் ஒரு சிட்டிகை
 • உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை

கொள்ளு மாவு ஒரு கப் பார்லி மாவு அரைக்க சீரகத்தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலக்கி கஞ்சி காய்ச்சி குடிக்கவும்.

தினமும் பருவதால் உடல் உறுதி பெறும். கெட்டநீர் முழுவதும் வெளியேறும். ஊழச்சதை கரையும்.
உடல் சிக்கென்று கட்டுக்கோப்பாக இருக்கும்

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?