Ash gourd | வெள்ளை பூசணிக்காய்

  Ash gourd |வெள்ளை பூசணிக்காய் 

  பூசணிக்காயின் விதையில் வைட்டமின் பி,வைட்டமின் ஏ,மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள், கால்சியம் ,இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ,சிங்க் லீனோலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் கிடைக்கும் நன்மைகளை பார்போம்.

நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு

    நுரையீரல் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் பூசணிக்காய் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு அல்லது எலுமிச்சைச்சாறு கலந்து குடிப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

     பூசணிக்காய் வயிற்றில் உள்ள நாடா புழுக்களை கொல்லக் கூடியது.
மூலத்திற்கும் மருந்தாக பயன்படக்கூடியது.

காமாலை நோயை தடுக்கிறது 

     ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் வெண்பூசணிப்பூவை மஞ்சள் காமாலை நோயை போக்கவும் சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.

   பூசணிக்காய் எலும்புகள் பலவீனம் ஆவதை தடுக்க உதவுகின்றது.

   இதில் மிகுந்திருக்கும் நார்ச்சத்து ஜீரண உறுப்புகளுக்கு பலத்தை கொடுத்து, மலச்சிக்கல் உண்டாகாதவாறு உதவி செய்கிறது.

நெஞ்சு சளி நீக்குகிறது

Ash gourd | வெள்ளை பூசணிக்காய்

     வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி,நெஞ்சு சளி, மூச்சடைப்பு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கதூண்டும் உணர்வை தடுகிறது

     சிறுநீரகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.சிறுநீர்ப்பையில் அடைப்போ அல்லது எரிச்சலுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
      அதோடு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்விற்கும் மருந்தாக பயன்படுகிறது.

இருதய கோளாறுகளை தடுகிறது

     வெண்பூசணி வேர் அற்புதமான மருந்திற்கு பயன்படுகிறது. பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால் இது அதிக ரத்த அழுத்தத்தையும், அதனால் ஏற்படக்கூடிய இருதய கோளாறுகளையும் தடுக்கின்றது.

    பூசணிக்காயில் துத்தநாகம் மிகுதியாக உள்ளது.

செல்களை உற்பத்தி

Ash gourd | வெள்ளை பூசணிக்காய் மருத்துவ குணங்கள்,

   வெண்பூசணி கொடியின் தண்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகின்றது.

   வெள்ளை பூசணிக்காயில் குறைவான எரிசக்தி, அதிக அளவு நார்ச்சத்து கார்போஹைட்ரேட்,புரதச்சத்து முதலியவை இருக்கின்றன.

ஆரோக்கியமான கண் பார்வை

Ash gourd | வெள்ளை பூசணிக்காய்

   கண்களின் நலம் மற்றும் ஆரோக்கியமான பார்வைக்கு பூசணிக்காயில் உள்ள விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிக அளவில் உதவுகின்றது.

   விட்டமின் பி 12, இரத்த கோளாறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

   பூசணிக்காயை உட்கொண்டு அனிமியாவை விரட்டலாம்.

வெள்ளை பூசணிக்காய் ஜூஸ்

நன்மைகள்

   வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வருவதனால் நாம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதனை பார்ப்போம்.

     நிறைய பேருக்கு அல்சர் பிரச்சனை இருக்கு, இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணம்,நம்ம உடலுக்கு தேவையான உணவுகள் இல்லை என்றால் இந்த அல்சர் பிரச்சினை வரும்.

அல்சர் பிரச்சனையை தீர்கிறது 

Ash gourd | வெள்ளை பூசணிக்காய் ஜூஸ்,

   இந்த அல்சர் பிரச்சனை உடலுக்குத் தேவையான உணவுகள் உண்ணாதி இருக்கும்பொழுது நம் வயிற்றில் புண்கள் ஏற்பட்டு எரிச்சல் ஏற்படும். இதனை தான் அல்சர் என்று கூறுகிறோம்.

  இந்தப் பிரச்சனைக்கு தினசரி காலை காலையில் ஒரு டம்ளர் வெள்ளைப் பூசணி ஜூஸ் குடித்து வந்தால் அல்சர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

    வெள்ளை பூசணிக்காய் ஜூஸுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் மற்றும் புண்கள் விரைவில் குணமடையும்.

உடல் எடை குறைக்க உதவுகிறது

    நம் உடம்பில் நார்ச்சத்து அதிகமாக இல்லை என்றால் உடல் எடை அதிகரிக்கும். நம்ம உடம்புல நார்ச்சத்து அதிகரிக்க இந்த எல்லை பூசணிக்காய் ஜூஸ் தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் உடல் எடை குறையும்.
    வெள்ளை பூசணிக்காயில் குறைந்த அளவு கலோரி இருப்பதனால் நமது உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது.

கெட்ட கொழுபிணைவெளியேற்றுகிறது 

      அதுமட்டுமின்றி நாம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட நீர் மற்றும் கெட்ட கொழுப்பு அனைத்தையும் விரைவில் வெளியேற்றுகின்றது.

உடல் சூட்டினை கட்டுபடுதுகின்றது 

     சிலருக்கு உடல் மிகவும் சூடாகவே இருக்கும். உடலில் வெப்பம் அதிகமாக உள்ளவர்களுக்கு தலைவலி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதனால் உடல் சூட்டினை கட்டுப்படுத்துகிறது.

இரத்த சோகையை தடுக்கிறது

Ash gourd | வெள்ளை பூசணிக்காய்

    பூசணிக்காய் ஜூஸ் உடன் தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு இரண்டையும் சேர்த்து குடிக்கும் பொழுது ரத்த சோகையிலிருந்து விடுபடலாம்.இது மன அழுத்தத்தை குறைக்கின்றது.

வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் செய்முறை 

   பூசணிக்காயை இரண்டாக வெட்டிக்கொள்ளவும் .பிறகு அதன் தோலினை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிஎடுத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரைதேவை என்றல் சேர்த்துக்கொள்ளலாம். இதில் வேறுஎதையும் சேர்க்கதேவையில்லை. இப்பொழுது மிக ஆரோகியமான வெள்ளை பூசனிக்காய் ஜூஸ் தயார்.

   இதனை தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வருவதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது.

சாம்பார் செய்யும் முறை 

   தேவையான பொருட்கள் 

  • 1 வெள்ளை பூசணிக்காய்
  • 150 கிராம் துவரம் பருப்பு

சாம்பாருக்கு தேவையான அளவு

  • சிறிதளவு மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • சின்ன வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி
  • கருவேப்பிலை
  • சாம்பார் தூள்
  • மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதளவு புளி
  • நெய்
  • ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு கடுகு
  • அரை டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • அரை டேபிள்ஸ்பூன் சீரகம்
  • 4 வர மிளகாய்

  வெள்ளை பூசணிக்காய் ஒன்றினை எடுத்துக் கொள்ளவும். இதன் தோளினை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    பருப்பு , 150 கிராம் துவரம் பருப்பினை எடுத்து கழுவி அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை குக்கரில் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

   பிறகு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சாம்பாருக்கு தேவையான அளவு சின்ன வெங்காயம், தக்காளி. 4 பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை போன்றவற்றினை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

    நன்றாக வதக்கிய பின் நறுக்கி வைத்த பூசணிக்காயினை சேர்த்துக் கொள்ளவும். எண்ணெயில் முழுமையாக பூசணிக்காயினை வதக்கிக்கொள்ளவும்.

     தேவையான அளவு தண்ணீரை சேர்த்து அதனுடன் சாம்பார் தூள் மற்றும் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துகொள்ளவும்.

      இதில் சிறிதளவு கரைத்து வைத்திருந்த புளியினை சேர்த்துக் கொள்ளவும். 

   பின் வேக வைத்திருந்த பருப்பினை கடைந்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு இதனை தாளிப்பதற்காக சிறிதளவு என்னை மற்றும் நெய்யினை சேர்த்துக் கொள்ளவும்.

    என்னை நன்றாக காய்ந்த பின் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு கடுகு அரை டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு மற்றும் அரை டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்து 4 வர மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

   பிறகு இதனை வேக வைத்திருந்த சாம்பாருடன் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பொழுது சுவையான வெள்ளை பூசணி சாம்பார் ரெடி.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?